செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkதோனி பெயருக்குள் மைக் சின்னம்; வைரலாகும் படம் உண்மையானதா?

தோனி பெயருக்குள் மைக் சின்னம்; வைரலாகும் படம் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஐபிஎல் மைதானத்தில் ரசிகர் ஒருவர் ஏந்திய பலகையில் தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக பரவும் படம்

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

ஐபிஎல் மைதானத்தில் ரசிகர் ஒருவர் ஏந்திய பலகையில் தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது.

தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படம்

X Link | Archive Link

தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படம்

Archive Link

தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படம்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் என்று பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!

Fact Check/Verification

ஐபிஎல் மைதானத்தில் ரசிகர் ஒருவர் ஏந்திய பலகையில் தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படத்தின் உண்மைத்தனமையை அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் ‘CSK Fans hold a placard to show support for CSK captain MS Dhoni’ என்று தலைப்பிட்டு புரோகேரளா எனும் இணைய ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் தோனி பெயருக்குள் மைக் சின்னம் இடம்பெற்றிருக்கவில்லை.

ஏப்ரல் 17, 2023 அன்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையே நடந்த போட்டியின்போது ரசிகர்கள் இந்த பலகையை காட்டியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படம்
Screengrab from prokerala.com

இச்செய்தில் அப்படமானது IANS தரப்பிலிருந்து பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அதை அடிப்படையாக வைத்து IANS இணையத்தளத்தில் தேடுகையில் அப்படம் நமக்கு கிடைத்தது. அப்படத்திலும் மைக் சின்னம் இடம்பெற்றிருக்கவில்லை.

தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படம்
Screengrab from iansphoto.in

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது தெளிவாகின்றது.

 Also Read: அண்ணாமலையை கெடா மாடு என்றாரா வானதி சீனிவாசன்?

Conclusion

ஐபிஎல் மைதானத்தில் ரசிகர் ஒருவர் ஏந்திய பலகையில் தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மை நமக்கு தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from prokerala, Dated April 17, 2023
IANS Photo Gallery

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular