Friday, December 19, 2025

Fact Check

பாம்பன் பாலத்தில் இருந்து ராமேஸ்வரத்தீவின் அழகுத் தோற்றம் என்று பரவும் தவறான புகைப்படத்தகவல்!

banner_image

பாம்பன் பாலத்தில் இருந்து ராமேஸ்வரத்தீவின் அழகு என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

Screenshot From Twitter @Anil_Kunju88

ராமேஸ்வரத்தீவின் அழகு. பாம்பன் பாலத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்” என்பதாக இப்புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from Facebook/Praba Karan
Screenshot From Facebook/KavalaninKadali

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உ.பி.யில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால் பாஜகவினர் அவரை தாக்கினரா?

Fact Check/Verification

பாம்பன் பாலத்தில் இருந்து ராமேஸ்வரத்தீவின் அழகு என்பதாக பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, குறிப்பிட்ட புகைப்படம் ஏற்கனவே வெனிஸ் நகரின் இதயம் போன்ற தோற்றம் என்பதாகப் பரவியது நமக்குத் தெரிய வந்தது.

ஜெர்மனியைச் சேர்ந்த லென்னார்ட் பேகல் என்கிற புகைப்படக்கலைஞர் முதன்முதலில் பிப்ரவரி 14, 2021 அன்று இப்புகைப்படத்தை பதிவிட்டு, “BREAKING NEWS! Scientists just discovered that the true City of Love isn’t Paris, but Venice! Swipe to see the scientific proof!* *don’t believe everything you read online. Believe in love. Happy valentine” என்று தெரிவித்துள்ளார். வெனிஸ் நகரின் புகைப்படத்தை மிரர் இமேஜ் முறையில் இணைத்து இதயம் போன்ற வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனையே, பலரும் வெனிஸ் நகர் இதயவடிவில் காட்சியளிப்பதாகப் பகிர்ந்து வந்துள்ளனர்.

Instagram will load in the frontend.

Mirrored View என்பதாக Arts&emotions என்கிற சமூகவலைத்தளப் பக்கத்திலும் இந்த புகைப்படம் கடந்த மார்ச் 17, 2021 ஆம் ஆண்டு ஷேர் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில சமூக வலைத்தளப்பக்கங்களும் இந்த புகைப்படம் Mirrored View of Venice City என்றே பகிர்ந்துள்ளன.

வெனிஸ் நகரின் கூகுள் எர்த் தோற்றத்தையும் இங்கே இணைத்துள்ளோம்.

CNN கடந்த ஏப்ரல் 17, 2020 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த Images of Venice from space show how coronavirus has changed the city’s iconic canals என்கிற கட்டுரையிலும் வெனிஸ் நகரின் உண்மையான தோற்றம் இடம் பெற்றுள்ளது.

எனவே, இப்புகைப்படமே தற்போது ராமேஸ்வரத்தின் அழகு என்பதாகப் பரவுகிறது என்பது தெளிவாகிறது.

Also Read: நடிகர் ரன்பீர் கபூர் ஆத்திரத்தில் ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்தாரா? உண்மை என்ன?

Conclusion

பாம்பன் பாலத்தில் இருந்து ராமேஸ்வரத்தீவின் அழகு என்பதாக பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Insta Post From, Lennart, Dated February 14, 2021
Facebook Post From, Lennart, Dated February 14, 2021
Report From, CNN, Dated April 17, 2020
Google Earth Image Of Venice



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage