Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உ.பி.யில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால், ஆற்றில் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“உ.பி.யில் ஒரு தலித் பெண் ஆற்றில் குளித்ததால் ஆறு தீட்டுப்பட்டு விட்டதாம், ஒரு பெண்ணின் மேலாடையை அவிழ்த்து அவளைக் கொடூரமாக தாக்கும் இந்திய ( RSS – BJP) தாலிபன்களின் வன்முறை வெறியாட்டம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக டி.ஆர் பாலு குறித்து தவறான செய்தி பரப்பும் அண்ணாமலை!
உத்திரப்பிரதேசத்தில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால், ஆற்றில் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் “Madhya Pradesh Women Beaten With Sticks By Family. No One helps”என்று தலைப்பிட்டு ஜூலை 04, 2021 அன்று NDTV வெளியிட்டிருந்த செய்தியை நம்மால் காண முடிந்தது.
இச்செய்தியில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தது என்றும், இரண்டு பெண்கள் தன் மாமாவின் மகன்களுடன் பேசியதால் அவர்களின் உறவினர்களால் தாக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து ஆஜ் தக் வெளியிட்டிருந்த செய்தியில், இச்சம்பவம் நடந்த தார் மாவட்டத்தின் டிஎஸ்பி அளித்த பேட்டி இடம்பெற்றிருந்தது. அதில், கடந்த ஜூன் 25 ஆம் தேதி தண்டா காவல் நிலையத்தில் இந்த பெண்கள் தாக்கப்பட்ட தகவல் கிடைத்தது. 26 ஆம் தேதி பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் நேற்று வைரலான இந்த வீடியோவை காண்கையில் அப்பெண்களுக்கு எதிராக கொடுமையான வன்முறை நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்கு சேர்க்கப்பட்டு, ஐபிசி 151 பிரிவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தார் மாவட்ட டிஎஸ்பி பேசி இருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இச்சமபவம் குறித்து மேலும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,
Also Read: நடிகர் ரன்பீர் கபூர் ஆத்திரத்தில் ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்தாரா? உண்மை என்ன?
உத்திரப்பிரதேசத்தில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால், ஆற்றில் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை தாக்கியதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Youtube Video, from NDTV dated July 04, 2021
Media reports from Aaj Tak, India Today, The hindu, and TOI
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 20, 2025
Ramkumar Kaliamurthy
November 14, 2025
Ramkumar Kaliamurthy
October 13, 2025