Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: கருணாநிதிக்கு விழாவில் இடம்போட்டு வைத்த திமுகவினர்
Fact: வைரலாகும் இடம் அவருடைய AI தொழில்நுட்ப உருவம் இடம்பெற ஒதுக்கப்பட்டதாகும்.
திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பவளவிழாவில் அமர்வதற்கு இடம் ஒதுக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகியபோது தியேட்டர்களில் ஆஞ்சநேயருக்கு ஒரு இடம் ஒதுக்கியது போன்று திமுகவினர் பகுத்தறிவின்றி செயல்பட்டதாக இத்தகவல் பரவுகிறது.
“பகூத் அறிவு என்பது இதுதான் ..கூமுட்ட #தற்குறி_திமுக யாருக்குடா சீட் போட்டு வச்சிருக்கானுக..இராமசாமி வாழ்க” என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?
Fact Check/Verification
திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பவளவிழாவில் அமர்வதற்கு இடம் ஒதுக்கியதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற திமுகவின் பவளவிழா நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு எனும் AI மூலமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தோற்றத்தைக் கொண்டுவருவதற்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
இதுகுறித்த, முழுமையான காணொளிக்காட்சி மாலைமுரசு உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட நிகழ்விற்காக ஒதுக்கப்பட்ட இடம் குறித்தே இவ்வாறு திமுகவினர் மறைந்தவருக்கு விழாவில் இடம் ஒதுக்கியதாக தவறாக செய்தி பரவுகிறது.
Also Read: பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாகப் பரவும் பொய்!
Conclusion
திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பவளவிழாவில் அமர்வதற்கு இடம் ஒதுக்கியதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
YouTube Post From, Malaimurasu, Dated September 18, 2024
YouTube Video From, News 18 Tamil Nadu, Dated September 18, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.