வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact CheckViralசன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தை அண்ணாமலைக்கு கூடியதாக பரப்பும் இணையவாசிகள்!

சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தை அண்ணாமலைக்கு கூடியதாக பரப்பும் இணையவாசிகள்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கர்நாடகாவில் அண்ணாமலையை காண கூடிய கூட்டம்
Fact: இக்கூட்டம் கேரளாவில் சன்னி லியோனை காண கூடிய கூட்டமாகும்

‘கர்நாடகாவில் அண்ணாமலை அண்ணாவை காண வந்த கூட்டம்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சன்னி லியோனை
Screengrab from Twitter@anbuselvan_Bjp
சன்னி லியோனை
Screengrab from Twitter@KarthikGnath420
சன்னி லியோனை
Screengrab from Twitter@Muthu66569675

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: VIP Bags மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டதா?

Factcheck / Verification

கர்நாடகாவில் அண்ணாமலையை காண கூடிய கூட்டம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அப்படம் குறித்த உண்மையை அறிய, அதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் படத்தில் காணப்படும் கூட்டம் கர்நாடகாவில் அண்ணாமலையை காண கூடியதல்ல, அது கேரளாவில் நடிகை சன்னி லியோனை காண கூடிய கூட்டம் என அறிய முடிந்தது.

சன்னி லியோன் 2017 ஆகஸ்ட் மாதத்தில் தனியார் கடை ஒன்றின் திறப்பு விழா ஒன்றில் கலந்துக்கொள்ள கொச்சின் வந்துள்ளார். அச்சமயத்திலேயே இந்த கூட்டம் கூடியுள்ளது. இந்த  நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சன்னி லியோன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவற்றுள் ‘My car in literally a sea of love in Kochi Kerala!!’ என தலைப்பிட்டு வைரலாகும் படம் பதிவிடப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இந்நிகழ்வு குறித்து சன்னி லயோனின் மற்ற பதிவுகள்:

Also Read: சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக பரவும் எடிட் வீடியோ!

Conclusion

கர்நாடகாவில் அண்ணாமலையை காண கூடிய கூட்டம் என்று பரவும் புகைப்படம், உண்மையில் கேரளாவில் சன்னி லியோனை காண மக்கள் கூடியபோது எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Tweet, from @SunnyLeone, Dated Aug 17, 2017

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular