Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ரெனால்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 045 Fine carbure பேனா தயாரிப்பு நிறுத்தம்
Fact: வைரலாகும் செய்தி தவறாக பரவுகிறது.
ரெனால்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 045 Fine Carbure பேனாவின் தயாரிப்பை நிறுத்துகிறது என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
“இனி இந்த பேனா வராதாம்…இதுல இருக்க எழுத்தெல்லாம் Blade வச்சி சொரண்டி #INDIA ன்னு கொண்டு வருவோம்” என்று இந்த தகவல் புகைப்படத்துடன் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்!
ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தியைத் தொடர்ந்து ரெய்னால்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்தோம். அதில், “To our esteemed customers, partners, and stakeholders. Recent misinformation about Reynolds in various media is misleading and inaccurate. Reynolds, with its 45-year legacy in India, has consistently prioritized quality and innovation. We have a strong future plan to expand and grow the writing business in India. We encourage everyone to refer to our website and social media channels for accurate information. Upholding the trust you’ve placed in us remains our utmost priority. Thank you for your unwavering support.(Reynolds India Management)” என்கிற செய்தி இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் 45 வருட பாரம்பரியத்துடன் உள்ள எங்களுடைய ரெனால்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து எழுதுகோல் பணியில் ஈடுபடும். உண்மையான தகவல்களுக்கு எங்களுடைய அதிகாரப்பூர்வ பக்கங்களை மட்டும் பின் தொடருங்கள், ஊடகங்களில் வெளியாகியுள்ள போலியான செய்திகளை நம்பாதீர்கள் என்று இதன்மூலமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெனால்ட்ஸ் 045 உள்ளிட்ட அவர்களது பாரம்பரிய தயாரிப்புகளுக்கான புதிய விளம்பரங்களும் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியாகியுள்ளது.
045 Fine Carbure பேனா அவர்களுடைய வலைத்தளத்தில் இன்னும் விற்பனையில்தான் உள்ளது என்பதும் நமக்கு உறுதியானது.
Also Read: சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக பரவும் தவறான தகவல்!
ரெனால்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 045 Fine Carbure பேனாவின் தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Website, Instagram and Facebook of Reynolds
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)