ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkநிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்!

நிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்!

Authors

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: நிலவில் இந்திய தேசிய சின்னத்தின் அச்சு
Fact: வைரலாகும் புகைப்படம் வரைகலைஞர் ஒருவரின் உருவாக்கமாகும்.

நிலவில் இந்திய தேசிய சின்னத்தின் அச்சு பதிக்கப்பட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”சந்திரயான் லேன்டரில் இருந்து கீழே இறங்கும் ரோவரில் அதாவது பிரக்யானில் வீல் பகுதியில் இந்த அச்சு இருக்கும்…. இந்த அச்சு நிலவில் பதிக்கப்படும்…. அங்கு காற்று இல்லாததால் அது அழியாது…. நிலவில் முத்திரை பதிக்கும் பாரதம்” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.

நிலவில்
Screenshot from Twitter @saiko58791481

Archived Link

Screenshot from Facebook/wesupportannamalai

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பதாகப் பரவும் வதந்தி!

Fact Check/Verification

நிலவில் இந்திய தேசிய சின்னத்தின் அச்சு பதிக்கப்படுவதாகப் பரவும் புகைப்படம்  குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ஆராய்ந்தபோது அதில் Krishanshu Garg என்கிற பெயர் இடம்பெற்றிருந்தது. அதன்மூலமாக, குறிப்பிட்ட நபரின் ட்விட்டர் பக்கத்தை கண்டறிந்தோம்.

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வைரலாகும் பதிவு போன்றே பல பதிவுகளைப் பகிர்ந்து அவற்றில் வைரல் புகைப்படம் ஒரு வரைகலை படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

லக்னோவைச் சேர்ந்த கலைஞரான அவரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்பு கொண்டோம். அப்போது அவர், வைரலாகும் புகைப்படம் ஒரு வரைகலை புகைப்படம்; உண்மையில் ரோவரால் பதிக்கப்பட்ட அச்சு அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்தார்.

“சந்திரயான் – 3 குறித்து அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். சந்திரனில் கால்பதிக்கும் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலேயே நானும் இந்த வரைகலை ஓவியத்தை உருவாக்கியுள்ளேன். எந்தவித போலிச்செய்தியையும் பரப்பும் நோக்கம் எனக்கு இல்லை; ஆனால், இதனை எவ்வாறு பிரக்யான் ரோவர் பதித்த அச்சு என்று பரப்பி வருகின்றனர் என்று புரியவில்லை. நான் போட்டோஷாப் மூலமாக இதனை உருவாக்கியுள்ளேன்” என்று விளக்கமளித்தார்.

மேலும், குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்வி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரக்யான் ரோவரின் சக்கரத்தில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய சின்னத்தின் அச்சு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனுடன் வைரலாகும் புகைப்படம் ஒத்துப்போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்றாரா அண்ணாமலை?

Conclusion

நிலவில் இந்திய தேசிய சின்னத்தின் அச்சு பதிக்கப்படுவதாகப் பரவும் புகைப்படம் உண்மையில் வரைகலைஞர் ஒருவரின் உருவாக்கம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context  

Sources
Responses by Krishanshu Garg on his Twitter page @KrishanshuGarg
Tweet by Gujarat Minister Harsh Sanghavi, dated July 14, 2023
Responses by Krishanshu Garg to Newschecker


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular