Authors
Claim: இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் வீடியோ!
Fact: வைரலாகும் வீடியோ 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டதாகும்.
பிரதமர் மோடி சென்ற வாரம் இத்தாலிக்கு சென்று, ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார். இந்த பயணத்தின்போது உலக நாடுகளின் பல தலைவர்களை சந்தித்ததுடன் இது தொடர்பான வீடியோவையும் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இத்தாலியில் பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தினால் கட்டணம் விதிக்க உள்ளதா டிராய்?
Fact Check/Verification
இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் வீடியோவை உற்று நோக்குகையில் அவ்வீடியோவில் காணப்படும் அரங்கத்தில் காணப்பட்ட எல்இடி திரைகளில் இந்தியக் கொடியும், ஆஸ்திரேலியக் கொடியும் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. கூடவே பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸும் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தேடியதில் பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கமான நரேந்திர மோடி யூடியூப் பக்கத்தில் பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டதாக வீடியோ ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இவ்வீடியோவானது மே 23, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
வைரல் வீடியோவை இவ்வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பல ஒற்றுமைகளை நம்மால் கண்டறிய முடிந்தது. பார்வையாளர்களின் இருக்கைகள், விளக்குகள், மேடை போன்றவை ஒரே மாதிரியாக இருந்தது.
தொடர்ந்து தேடியதில் நரேந்திர மோடி யூடியூப் பக்கத்தில் பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸும் சிட்னி நகரிலிருக்கும் குடோஸ் வங்கி அரங்கில் நுழையும் வீடியோ பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவையும் வைரலாகும் வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் சிட்னியில் நடந்த அதே நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்பது உறுதியானது.
பிரதமர் மோடி மே 23, 2023 அன்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியானது சிட்னி நகரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவே இத்தாலியில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
Also Read: காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றனரா?
Conclusion
இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video By Narendra Modi, Dated May 23, 2023
(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)