ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Check‘Mr. Drugs நிதி’ என்று தனக்கு மக்கள் செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி கூறினாரா?

‘Mr. Drugs நிதி’ என்று தனக்கு மக்கள் செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மக்கள் தனக்கு ‘Mr. Drugs நிதி’ என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

“மக்கள் எனக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் ‘Mr. Drugs நிதி’” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அந்த நியூஸ்கார்டில் உதயநிதியுடன் போதை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் இருக்கும் படமும் இடம்பெற்றிருந்தது.

மக்கள் தனக்கு Mr. Drugs நிதி என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

X Link | Archive Link

மக்கள் தனக்கு ‘Mr. Drugs நிதி’ என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archive Link

மக்கள் தனக்கு ‘Mr. Drugs நிதி’ என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்றாரா சீமான்?

Fact Check/Verification

மக்கள் தனக்கு ‘Mr. Drugs நிதி’ என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துரு (Font) சன் நியூஸ் வழக்கமாக பயன்படுத்தும் எழுத்துருவிலிருந்து மாறுபடிருந்தது. அதை தவிர்த்து பார்க்கையில் ஜாஃபர் சாதிக் இடம்பெற்றிருந்த படத்திற்கு மேல் ‘#தேர்தல் PUNCH’  எனும் வார்த்தை மங்கலாக ஒழுங்கற்று இருப்பதை காண முடிந்தது. அதேபோல் சன் நியூஸின் இணையத்தள முகவரி பாதியிலேயே அழிக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

மக்கள் தனக்கு ‘Mr. Drugs நிதி’ என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என உணர முடிந்தது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பரப்பி வருவதால் இதை முழுமையாக ஆராய்ந்து விளக்க விரும்பினோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது சன் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் பிரதமர் மோடிக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர் ‘Mr. 28 பைசா’ – திண்டுக்கல் பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு” என்று தலைப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை சன் நியூஸ் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

 Also Read: KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

மக்கள் தனக்கு ‘Mr. Drugs நிதி’ என்று செல்லப்பெயர் வைத்துள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Sun News, Dated March 24, 2024
Phone Conversation with Manoj, Sun News

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular