திங்கட்கிழமை, ஜூன் 17, 2024
திங்கட்கிழமை, ஜூன் 17, 2024

HomeFact CheckViralராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக பரவும் எடிட் புகைப்படம்!

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக பரவும் எடிட் புகைப்படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பனை
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம்
Screenshot from Twitter@GDiyash
ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம்
Screenshot from Twitter@MrrFanda
ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம்
Screenshot from Twitter@jackie0o

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினர் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?

Fact Check/Verification

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இக்கடை குறித்து கூகுளில் தேடினோம். இதில் சென்னை மேற்கு மாம்பலத்தில் இக்கடை இயங்கி வந்ததாக தகவல் கிடைத்தது.

கூகுள் மேப்பில் இக்கடை குறித்து புகைப்படங்களை நம்மால் காண முடிந்தது. அவற்றுள் இக்கடையில் விற்பனையில் பொருட்களின் விலைப்பட்டியல் படமும் ஒன்றாகும். அப்பட்டியலில் அசைவ உணவு வகைகள் இடம்பெற்றிருக்கவில்லை.

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Google Maps

அதேபோல் இக்கடையின் முகப்பு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த போர்டின் நிறம் நீல நிறத்திலும், வைரலாகும் படத்தில் காணப்படும் போர்டின் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், இவ்விரு போர்டுகளிலும் ஒரே முதியவர்களின் படங்கள் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம்

இதனையடுத்து தேடியதில் Caresurfer AK  எனும் யூடியூப் பக்கத்தில் டிசம்பர் 30, 2022 அன்று இந்த உணவகம் குறித்து வீடியோ ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவின் 43 ஆவது விநாடியில் மேற்கு கே கே நகரில் புதியதாக மற்றொரு உணவகம் திறக்கப்படவுள்ளதாக, உணவகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு ஒன்றை நம்மால் காண முடிந்தது.

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம்
Screengram form Youtube

இதனையடுத்து அக்கடை குறித்து கூகுள் மேப்பில் தேடினோம். அந்த புதிய உணவகத்தில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பதுபோல வெள்ளை நிறத்திலேயே முகப்பு பக்க போர்டு வைக்கப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. ஆனால் அந்த போர்டில் அசைவம் விற்பதாக குறிப்பிட்டிருக்கவில்லை. அதில் ராம் ஐயர் டிபன் கடை என்பதற்கு கீழ், ‘PURE VEG RESTAURANT’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Google Maps

இந்த வாசகத்தை எடிட் செய்து நீக்கி, ‘சைவம் மற்றும் அசைவம்’ என்ற புதிய வாசகத்தை சேர்த்து, ஐயர் கடையில் அசைவம் விற்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான போர்டின் படத்தையும், எடிட் செய்யப்பட்ட போர்டின் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: Fact Check: கர்நாடகாவில் ஓட்டுக்கு பணம் தந்ததா பாஜக?

Conclusion

ராம் ஐயர் டிபன் கடையில் அசைவ உணவு விற்பதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Youtube Video, from Caresurfer AK, Dated December 30, 2022

Google Maps

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular