Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: முஸ்லீம் இளைஞர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியதாக பரவும் வீடியோ!
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் இருப்பவர் இந்து மதத்தை சார்ந்தவரே ஆவார்.
“மேலே உள்ள முஸ்லீம் அவன் பேசியதை அவரவர் செல்லில் உள்ள அனைத்து குரூப்களிலும் பகிறுங்கள் அவன் கைது ஆகும் வரை” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் காணப்படும் இளைஞர் ஒருவர் மலக்குழி மரணம் குறித்த கவிதை ஒன்றை வாசித்திருந்தார். அக்கவிதையில் இந்து கடவுள்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!
Fact Check/Verification
முஸ்லீம் இளைஞர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியதாக வீடியோ ஒன்று வைராலானதை தொடர்ந்து வைரலாகும் வீடியோவில் காணப்படும் இளைஞர் குறித்து தேடினோம்.
அத்தேடலில் அந்த இளைஞரின் பெயர் விடுதலை சிகப்பி என்பதும், அவர் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகின்றார் என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து தேடியதில் இவ்வீடியோவானது கடந்த மே மாதத்திலேயே சமூக ஊடகங்களில் பரவி வந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேடியதில் பா.ரஞ்சித் இதுக்குறித்த கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அந்த அறிக்கையில் விடுதலை சிகப்பி மீது சுமத்தப்பட்ட வழக்கு கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் விடுதலை சிகப்பி பிறப்பால் இந்து மதத்தை சார்ந்தவர் என்றும், அவரின் இயற்பெயர் விக்னேஸ்வரன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
‘வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இந்து மதத்தைப் பழிக்கிறான்’ என்கிற பொய் பிரச்சாரம் இணையத்தில் பரப்பப்படுகின்றது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளிலும் விடுதலை சிகப்பியின் இயற்பெயர் விக்னேஸ்வரன் என்றே குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் இஸ்லாமிய இளைஞர் இந்து கடவுளை இழிவுப்படுத்தியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது தெளிவாகின்றது.
Also Read: சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!
Conclusion
முஸ்லீம் இளைஞர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் இளைஞர் இந்து மதத்தை சார்ந்தவரே ஆவார். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Press Release from Pa. Ranjth, Cinema Director, Dated May 09, 2023
Report from Maalai Murasu
Report from News 18 Tamil
Report from Hindu Tamil
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.