Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் தடுத்தனர்.
இத்தகவல் தவறானதாகும். இரவு 10 மணி ஆனதால் போலீசார் அந்நிகழ்ச்சியை நிறுத்தினர். கேரளாவில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 6 மணி வரை எவ்வித காரணத்திற்காகவும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என விதி உள்ளது.
கேரளாவில் இந்துக்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடக்கும்போது இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் அந்நிகழ்ச்சியை பாதியிலேயே தடுத்து நிறுத்தியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் எடிட் படம்!
கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரப்பப்படும் வீடியோவில் மனோரமா நியூஸ் ஊடகத்தில் லோகோ, வாட்டர்மார்க் போன்றவை இருப்பதை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் மனோரமா நியூஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 5 அன்று இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

கேரளா ஆலப்புழாவில் உள்ள கொட்டம் குலங்கரா கோவிலில் கங்கா சசிதரன் எனும் சிறுமியின் வயிலின் கச்சேரி நடந்துக்கொண்டிருக்கும்போது இரவு 10 மணி ஆன நிலையில் போலீஸார் பாதியிலே அக்கச்சேரியை நிறுத்த கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்விடத்திலும் முஸ்லீம்கள் இக்கச்சேரியை தடுத்ததாக இச்செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து தேடுகையில் ஒன் இந்தியா மலையாள ஊடகத்திலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியிலும் கச்சேரியை நிறுத்தியது போலீசார் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது; முஸ்லீம்கள் நிறுத்தியதாக கூறப்படவில்லை.
இதனையடுத்து சிறுமி கங்கா சசிதரனின் தந்தை சசிதரனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம்.
அதற்கு அவர், “ஆலப்புழாவில் நடந்த கச்சேரி இரவு 10 மணிக்கு மேல் நடந்ததால் போலீசார்தான் கச்சேரியை தடுத்து நிறுத்தினர். இதில் இந்து – முஸ்லீம் பிரச்சனை எதுவும் இல்லை; மதத்திற்கு இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. அவள் வாசித்துக்கொண்டிருந்த பாடலை முழுமையாக வாசிக்க போலீசார் விடவில்லை அதுமட்டுமே எங்களின் ஒரே ஆதங்கம்” என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தேடுகையில் கேரளாவில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பான நெறிமுறைகள் குறித்த சுற்றறிக்கை கேரள போலீஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கிடைத்தது.
அந்த அறிக்கையில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை எவ்வித காரணத்திற்காகவும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் இரவு 10 மணி ஆனதால் அரசின் விதியை அனுசரித்து அச்சிறுமியின் கச்சேரி போலீசாரால் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும், கச்சேரி பாதியில் நிறுத்தப்பட்டதற்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதும் தெளிவாகின்றது.
Also Read: மெரினா கடற்கரை விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று கூறினாரா தவெக தலைவர் விஜய்?
கேரளாவில் இந்துக்களின் இசை நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். இரவு 10 மணிக்குமேல் கச்சேரி நடந்ததால் கேரள அரசின் விதியை பின்பற்றி போலீசார் அக்கச்சேரியை நிறுத்தியுள்ளனர்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Manorama News, dated March 5, 2025
Report by One India Malayalam, dated March 6, 2025
Phone Conversation with Sasidharan, Father of Violin Artist Ganga Sasidharan
Kerala Police Circular
(This story has been published with the input of Sabloo Thomas, Newschecker Malayalam)
Ramkumar Kaliamurthy
October 9, 2025
Ramkumar Kaliamurthy
October 8, 2025
Ramkumar Kaliamurthy
August 8, 2025