Fact Check
விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் எடிட் படம்!
Claim
விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: முதலமைச்சர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?
Fact
விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரவும் படத்தில் அவ்விருவரும் முட்டிப்போட்டு மேரி மாதா சிலைக்கு முன் இருப்பதாக உள்ளது.
இப்படம் குறித்து அறிய இப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். அத்தேடலில் கெத்து சினிமா எனும் இணையத்தளத்தில் “Vijay Birthday Special Rare Collection With His Wife Sangeetha” என்ற தலைப்பில் விஜயும், அவரது மனைவி சங்கீதாவும் இணைந்து பல தருணங்களில் எடுத்த படங்கள் வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அப்படங்களில் ஒன்றாக விஜயும் சங்கீதாவும் மேரி மாதா சிலைக்கு முன் முட்டிப்போட்டிருக்கும் படமும் இடம்பெற்றிருந்தது.

இப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை (AI) பயன்படுத்தி மாற்றியே விஜய் மற்றும் திரிஷாவின் பழைய படம் என்று பரப்பப்படும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Hive Moderation, Sightengine, WasitAi உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு படங்களை கண்டறியும் இணையத்தளங்கள் வாயிலாக வைரலாகும் படத்தை சோதித்ததில் இந்த உண்மை தெளிவானது.



Also Read: பாஜக அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாரா அஜீத் குமார் மீது புகாரளித்த நிகிதா?
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

Sources
Report from Gethu Cinema, dated June 21, 2016
Hive Moderation
Sightengine
WasitAi