ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தவறான வீடியோ!

கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் வீடியோ.

Fact: இத்தகவல் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் இந்தியாவில் நடந்ததல்ல, 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்ததாகும்.

“கேரளாவில் நம் இந்து கோவிலில் உள்ள இந்து நம்பிக்கைகளை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய காட்டுமிராண்டி கும்பல்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் வீடியோ.

X Link | Archive Link

கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் வீடியோ.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?

Fact Check/Verification

கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஷ்குமார் வாங்க்வானி பாகிஸ்தானில் உள்ள போங்க் நகரத்தில் இந்துக்கோயில் தாக்குதலுக்குள்ளாகியதாக கூறி வைரலாகும் இவ்வீடியோவை ஆகஸ்ட் 04, 2021 அன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் ஜீ நியூஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களிலும் இதுக்குறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் பாகிஸ்தானில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் வீடியோ.
Screengrab from Zee News English
கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் வீடியோ.
Screengrab from TOI
கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் வீடியோ.
Screengrab from Hindustan Times

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் கேரளாவில் நடக்கவில்லை, பாகிஸ்தானில் நடந்தது என்பது உறுதியாகின்றது.

Also Read: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் 2022ஆம் ஆண்டு வீடியோ!

Conclusion

கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் இந்தியாவிலேயே  நடக்கவில்லை. அச்சம்பவம் 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்ததாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from Dr. Ramesh Vankwani, Member of National Assembly, Dated August 04, 2021
Report from Zee News English, Dated August 05, 2021

Report from Times of India, Dated August 05, 2021
Report from Hindustan Times, Dated August 05, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular