Claim: ஆளுநர் ரவியை பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தாக்கி பேசியதாக பரவும் வீடியோ!
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
ஆளுநருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? நான் சவால் விடுகிறேன். ஆளுநருக்கு தைரியம் இருந்தால் தமிழகத்தின் ஏதோ ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? உங்கள் கொள்கைகளை எடுத்துச் சென்றால் தமிழக மக்கள் உங்களை செருப்பால் அடிப்பாங்க” என்று தமிழக பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவை மதுரை மண்டல தகவல் தொழிற்நுட்ப அணியின் பொறுப்பாளர் பிரபு சந்திரன் உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நிலவில் இந்திய தேசிய சின்னம் பதிக்கப்பட்டதாகப் பரவும் வரைகலை புகைப்படம்!
Fact Check/Verification
ஆளுநர் ரவியை பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தாக்கி பேசியதாக வீடியோ ஒன்று வைர்லானதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் வைரலாகும் இவ்வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது.
சமீபத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘நீட்’டுக்கு எதிராக போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். அப்போரட்டத்தில் ஆளுநர் ரவியை மிகவும் காட்டமாக அவர் விமர்சித்திருந்தார். அதில் ஒரு கட்டத்தில், “உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள். செருப்பை கழட்டி அடிப்பாங்க” என்று அவர் பேசி இருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாராயணன் திருப்பதி வீடியோ ஒன்றை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
2 நிமிடம் 18 வினாடிகள் உள்ள அந்த வீடியோவின் முதல் 20 நொடிகளை மட்டும் வெட்டி, ஆளுநருக்கு எதிராக நாராயணன் திருப்பதி பேசியதாக பரப்பப்பட்டு வருவதை இதன்மூலம் அறிய முடிந்தது.
Also Read: சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக பரவும் தவறான தகவல்!
Conclusion
ஆளுநர் ரவியை பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தாக்கி பேசியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
Tweet from Narayanan Thirupathy, Dated August 20, 2023
Report from Neerthirai, Dated August 20, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)