ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஆளுநர் அளித்த விருந்தில் கலந்து கொண்டாரா அமைச்சர் பொன்முடி? உண்மை என்ன?

ஆளுநர் அளித்த விருந்தில் கலந்து கொண்டாரா அமைச்சர் பொன்முடி? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த விருந்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @Veera284
Screenshot from Twitter @AiadmkTrends

“ஆளுனர் அளித்த விருந்து சிறப்பா இருக்கா சார்” என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கேட்கும் வகையில் புகைப்படச்செய்தி வலம் வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலை பேசியதாகப் பரவும் பேச்சாளர் பெருமாள் மணியின் படையப்பா வெற்றி விழா உரை வீடியோ!

Fact Check/Verification

ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஒன்றிய திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உணவு அருந்தும் காட்சி இடம் பெற்றுள்ளது.

தொடந்து, இதுகுறித்து ஆராய்ந்தபோது ஜனவரி 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில், தமிழ்நாடு ஆளுநர், அமைச்சர் பொன்முடி உட்பட குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ள நான்கு பேரும் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்வின்போது, அவர்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் உணவருந்திய காட்சியே தற்போது இணையத்தில் பரவி வருகிறது. திமுக மாணவர் அணித்தலைவரான ஆர்.ராஜீவ் காந்தி ”உங்கள் புலனாய்வு லட்சனம் இவ்வளவுதானா? சிவகங்கை அழகப்பா பல்கலைகழகத்தின் நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த இயல்பான மரியாதை இது!” என்று பதிவிட்டுள்ளார்.

திமுக நிர்வாகிகள் பலரும் இதுகுறித்து தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு வீடியோ மற்றும் புகைப்படங்களில் இவர்கள் நால்வரும் ஒன்றாக கலந்து கொண்டதையும் காணலாம்.

அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களிலும் அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவர்கள் நால்வரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே, இப்புகைப்படம் அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்டது; ஆளுநர் அளித்த விருந்தில் அல்ல என்பது உறுதியாகிறது.

Also Read: அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் தைவான் வீடியோ!

Conclusion

ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources
Twitter Post From Minister Dharmendra Pradhan, Dated January 22,2023
Twitter Post From, Minister KR Periakaruppan, Dated January 22, 2023
YouTube Video From, Sippy TV, Dated January 22, 2023
Twitter Post From, R.Rajiv Gandhi DMK, Dated January 22, 2023
Twitter Post From, PoornaSangeetha DMK, Dated January 22, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular