நிர்மலா சீதாராமனின் மகள் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்பிட்டபின் பரவிய போலிச் செய்திகளின் தொகுப்பு!
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
நிர்மலா சீதாராமனின் மகள் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, உரிய கீ வேர்டுகளை பயன்படுத்தி நிர்மலா சீதாராமன் மகள் குறித்து இணையத்தில் தேடினோம்.
இதில் நிர்மலா சீதாராமன் மகள் வங்கமாயி பரிக்கலா 2020 ஆம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரை காண பாராளுமன்றம் வந்திருந்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
ஊடகங்களில் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் தோற்றமானது வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் தோற்றத்துடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை. வைரலாகும் புகைப்படத்தை ஆய்வு செய்கையில் இராணுவ உடையில் இருக்கும் பெண்ணின் பெயர் நிகிதா என அவரின் சீருடையில் எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது (நிர்மலா சீதாராமனின் மகளின் பெயர் வங்கமாயி பரிக்கலாவாகும்).

இதனையடுத்து நிர்மலா சீதாராமனுக்கு வேறு மகள் இருக்கிறாரா என்று தேடுகையில், நிதியமைச்சருக்கு ஒரே ஒரு மகள்தான் உள்ளார் என்பதை நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் அறிய முடிந்தது.

இதனையடுத்து வங்கமாயி பரிக்கலா குறித்து தேடுகையில் அவர் ஊடகவியலாளராக பணிபுரிந்து வருகின்றார் என்பதை அறிய முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் படம் குறித்து தேடினோம். இதில் வைரலாகும் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு நிதியமைச்சர் அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியபோது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. பாதுகாப்புத்துறை இதுக்குறித்து டிவீட் செய்திருந்தது.
ஊடகங்களிலும் இதுக்குறித்து அச்சமயத்தில் செய்தி வந்திருந்தது. அதை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
தொடர்ந்து தேடுகையில் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வைரலாகும் படத்தில் இருப்பவர் அமைச்சரின் மகள் இல்லை என்றும், அவர் பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் அதிகாரி என்றும் தெளிவுப்படுத்தி டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.
Also Read: உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?
Conclusion
நிர்மலா சீதாராமனின் மகள் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது
Result: False
Sources
Tweet By @DefenceMinIndia, Dated November 7, 2018
Tweet By @SpokespersonMoD, Dated January 2, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)