நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் மீண்டும் மீண்டும் நீக்கம் செய்யப்பட்டதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

குமரி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கனிமவளங்களை திருடி சட்டவிரோதமாக கேரள மாநிலத்திற்கு கடத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், அக்கட்சித்தலைவர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், கூட்டத்தில் பேசிய துரைமுருகன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களைப் பேசியதாக தெரிகிறது. அவர் மீது அதனடிப்படையில் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து, நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் துரைமுருகன்.
இச்சூழ்நிலையில், 11/10/2021 ஆன இன்று இந்த சர்ச்சை பிரச்சினையைத் தொடர்ந்து நாதக கட்சியில் இருந்து துரைமுருகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டது போன்ற அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இது மூன்றாவது தடவையாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கான அறிவிப்பு என்பதாகவும் வைரலாகிறது.




Also Read: பஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்தாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/Verification
நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் மீண்டும் ஒருமுறை நீக்கப்பட்டதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் பதிவில் மூன்று அக்கட்சி அறிக்கைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், ஏற்கனவே இரண்டு முறை நீக்கம் செய்யப்பட்ட துரைமுருகன் தற்போது மூன்றாவது முறையாகவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதாக பதிவுகள் வைரலாகின்றன.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மக்கள் தொடர்பு பிரிவு பாக்யராஜனிடம் பேசினோம். நமக்கு இதுகுறித்து விளக்கமளித்த அவர், “ஏற்கனவே இரண்டு தேதிகளிடம் இடம்பெற்றுள்ள அறிக்கைகள் உண்மையானவை. ஆனால், தற்போது வைரலாகும் அறிக்கை நாம் தமிழர் கட்சியால் வெளியிடப்பட்டது இல்லை. துரைமுருகன் தற்போது நாம் தமிழர் கட்சியில்தான் இருக்கிறார். அவர் நீக்கம் செய்யப்படவில்லை. பரவும் தற்போதைய அறிக்கை போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று நமக்கு விளக்கமளித்தார்.
வைரலாகும் அறிக்கையில் அக்கட்சியின் வாட்டர் மார்க் லோகோவும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதும், துரைமுருகன் கைதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் மீண்டும் நீக்கப்பட்டதாகப் பரவும் செய்தியறிக்கை எடிட் செய்யப்பட்டது என்பதை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Naam Tamilar Party Spokesperson
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)