Fact Check
ஓலா நிறுவனம் தனது இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்ததா?
ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் தயாரிக்கும் இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டியுள்ளது என்பதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஓலா எலக்ட்ரிக் தொழிற்சாலை. அந்நிறுவனம், தமிழகத்தில் இ-ஸ்கூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையை துவங்கியுள்ளது. இதன் முதல் இ-ஸ்கூட்டர் எஸ்-1 மாடல் சமீபத்தில் வெளியுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது, “தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது-பவிஷ் அகர்வால் தகவல்” என்னும் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் தயாரிக்கும் இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது என்பதாக பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட அந்த வைரல் நியூஸ் கார்டு நியூஸ் 7 செய்திநிறுவன நியூஸ் கார்டு போன்று பரவிய நிலையில், வைரலாகும் செய்தி மற்றும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நியூஸ் 7, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
“தமிழ்நாட்டில் ஓலா இ-ஸ்கூட்டர் ஆலை வருங்காலத்தில் பெண்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும் என்று தலைமை நிர்வாகி பவிஷ் அகர்வால் தகவல்” என்கிற நியூஸ் கார்டினை எடுத்து குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட அச்செய்தி போலியானது என்பது நமக்கு உறுதியானது.
Conclusion:
ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் தயாரிக்கும் இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது என்பதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Drives park: https://tamil.drivespark.com/two-wheelers/2021/ola-electric-scooter-s1-rolls-out-from-future-factory-029148.html
News 7 Tamil: https://mobile.twitter.com/news7tamil/status/1438050136794431491
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)