Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
விஜயை காப்பாற்ற அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்த தாயார் ஷோபா
வைரலாகும் புகைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டே எடுக்கப்பட்டதாகும்.
விஜயை காப்பாற்ற அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்த தாயார் ஷோபா என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”விஜய்யை காப்பாற்ற சொல்லி அமர் பிரசாந்த் ரெட்டி காலில் விழுந்த விஜயின் தாய் ஷோபா. குடும்பமே பாஜக காலடில தான் கிடக்கு போல” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக தலைவர் விஜய் பனையூரில் பதுங்கியதாக விமர்சனம் செய்தாரா நடிகர் சூரி?
விஜயை காப்பாற்ற அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்த தாயார் ஷோபா என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூன் 25, 2023 அன்று “She is the biggest strength behind @actorvijay.” என்று இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் அமர் பிரசாத் ரெட்டி.
எனவே, கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சந்திப்பையே தற்போது கரூர் சம்பவத்திற்கு பிறகான சந்திப்பு என்பதாக போலியாக பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகியது.
Also Read: விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக பரவும் படம் உண்மையானதா?
விஜயை காப்பாற்ற அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்த தாயார் ஷோபா என்று பரவும் புகைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டே எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by Amar Prasad Reddy, dated June 25, 2023
Self Analysis
Ramkumar Kaliamurthy
December 20, 2023
Ramkumar Kaliamurthy
April 13, 2023
Ramkumar Kaliamurthy
November 16, 2022