Fact Check
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!
Claim: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை
Fact: வைரலாகும் செய்தி 2021ஆம் ஆண்டு கொரோனா கால செய்தியாகும்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடை விதித்துள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”ஓட்டு போட்ட மகா ஜனங்களே கேட்டுக்கங்க. அதாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுபொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லவே இல்லை….அப்புறம் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதி இல்லையாம். நாளைக்கு கோவில் பொது இடங்களிலோ அல்லது மக்கள் வசிக்கும் ஊர்களில் கட்டவே கூடாதுனு சொல்லுவாங்க அதையும் சகிச்சுக்கிட்டு வாழுங்க” என்று இந்த செய்தி புகைப்படம் வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் ‘மூன் வாக்’ சென்றாரா?
Fact Check/Verification
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தியில் உள்ள வார்த்தைகளின் மூலமாக கீ-வேர்ட் சர்ச் உபயோகித்து தேடியபோது, கடந்த ஆகஸ்ட் 30, 2021 அன்று தந்தி டிவியின் சமூக வலைத்தளப்பக்கத்தில் “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதி” என்று செய்தி வெளியாகியிருந்தது.
இதுகுறித்து, அவர்களுடைய யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள வீடியோ செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி கட்டுபாடுகள் குறித்து வலியுறுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட செய்தியையே புகைப்படமாக பரப்பி வருகின்றனர். ஒன்றிய அர்சு கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த ஆண்டு விதித்த நிலையில் அதன் ஒரு பகுதியாகவே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ரெனால்ட்ஸ் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் உண்மையா?
Conclusion
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை என்று பரவும் செய்தி கொரொனா காலகட்டத்தில் வெளியாகிய பழைய செய்தி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Post From, Thanthi Tv, Dated August 30, 2021
Facebook Post From, Thanthi Tv, Dated August 30, 2021
YouTube Video From, Thanthi Tv, Dated August 30, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)