Fact Check
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக்குப்பின் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளாரா?
Claim
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக்குப்பின் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Also Read: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ராஜ்நாத் சிங் காலில் விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையா?
Fact
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக்குப்பின் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம்.
நம் தேடலில் ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “The perfect ‘Theri’fic combination! Thank you, @trishakrishnan and Vijay sir for choosing us. We’re thrilled to be a part of your journey!” என்று தலைப்பிட்டு பிப்ரவரி 26, 2023 அன்று வைரலாகும் படத்தின் உண்மையான படத்தை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அப்படத்தில் விஜய் மற்றும் விமானியுடன் நடிகை திரிஷாவும் இருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் 2023 பிப்ரவரியில் சமயம் தமிழ், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் இப்படம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் தவெக தலைவர் விஜயின் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக்குப்பின் எடுக்கப்பட்ட படமல்ல; அப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய படம் என்பது தெளிவாகின்றது.
Sources
Instagram post by SpiceJet Airlines, dated February 26, 2023
Report by Samayam Tamil, dated February 27, 2023
Report by Hindustan Times Tamil, dated February 27, 2023