Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“பாழாய் போன தமிழக அரசின் ஆட்சி அவலம்! பள்ளத்தில் லாரி பதியாமல் இருக்க ரேசன் கடை ஊழியர்கள் ரேசனுக்கு வந்த அரிசி மூட்டை வைத்து லாரியை கடக்க செய்து, சாக்கடையில் கொட்டிய அரிசியை மீண்டும் அள்ளி ரேசன் கடைக்கு கொண்டு செல்லும் காணொளி காட்சி!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read: ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும் வதந்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து, ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி அதன் பின்னணி குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல, 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது. ஒன் இந்தியா தமிழ் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் இருக்கும் சம்பவமானது கடந்த 2017 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைப்பெற்றுள்ளது. தமிழகத்தில் அச்சமயத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்க்கையில் திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.
Also Read: இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல்கலாம், தாகூர் படங்கள் இடம்பெறவிருப்பதாக பரவும் தகவல்!
Conclusion
திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக பரவும் வீடியோவில் காணப்படும் சம்பவம் திமுக ஆட்சியில் நடைப்பெற்றது அல்ல, அது அதிமுக ஆட்சியில் நடைப்பெற்றது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False Context/Missing Context
Sources
Youtube Video from One India Tamil Published on Oct 31, 2017
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.