ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் உத்திரப் பிரதேச வீடியோ!

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் உத்திரப் பிரதேச வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டனர்.

Fact: இச்சம்பவம் உண்மையில் 2019 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாகும்.

ராஜஸ்தானில் அடுத்த மாதம் மாநில பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில், “ராஜஸ்தானில் பாஜக தலைவர்களின் நிலை. குஜராத் லாபியின் டிக்கெட் விநியோகத்திற்குப் பிறகு, ராஜஸ்தானில் பாஜக அனைத்து மாவட்டங்களிலும் பெரும் கொந்தளிப்பைக் கண்டது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் வீடியோத் தகவல்

X Link | Archived Link

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் வீடியோத் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?

Fact Check/Verification

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் “BJP MP Sharad Tripathi beats MLA with shoes” என தலைப்பிட்டு TV9 Bharatvarsh யூடியூப் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை 06 மார்ச், 2019 அன்று பதிவேற்றம் செய்திருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து இதுக்குறித்து தேடுகையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இச்சம்பவம் முறித்து நியூஸ் 18 தமிழ்நாடில் செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அதில் அச்சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் நடந்தது என்றும், உள்ளூர் சாலையில் பாஜக எம்.பி சரத் திரிவேதியின் பெயர் போடாதது தொடர்பாக அவருக்கும் பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் சிங்குக்கும் ஏற்பட்ட தகராறே இச்சம்பவம் என்றும் அறிய முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் ராஜஸ்தானில் நடந்தது அல்ல என்பது தெளிவாகின்றது.

Also Read: இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரவும் சிரியாவின் பழைய படம்!

Conclusion

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் 4 ஆண்டுகளுக்கு முன்பு 2019-யில் உத்திரப்பிரதேத்தில் நடந்ததாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from TV9 Bharatvarsh, Dated March 06, 2019
Report from News18 Tamil Nadu, Dated March 07, 2019

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular