ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதிமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் என்று பரவும் 2019ஆம் ஆண்டு...

திமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் என்று பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: வேலூரில் ₹5 கோடி பறிமுதல்! திரும்பவும் உபிஸ் மாட்டிக்கிட்டானுங்க போல

Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

திமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

”வேலூரில் ₹5 கோடி பறிமுதல்! திரும்பவும் உபிஸ் மாட்டிக்கிட்டானுங்க போல” என்று இந்த வீடியோ பரவுகிறது.

திமுக
Screenshot from X @Pulsar220_

Archived Link

Screenshot from Facebook/bala.muruganangel

Facebook Link/Archived Link

Screenshot from Facebook/BJPFollowersErode

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

 Also Read: அண்ணாமலை மீது போக்சோ வழக்கு இருப்பதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

திமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவில் தந்தி டிவி லோகோ இருந்தபோதிலும் அதில் தேதி எங்கும் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, அந்த வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அதன் முடிவில், கடந்த ஏப்ரல் 01, 2019 அன்று தந்தி டிவி இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. “துரைமுருகன் உதவியாளர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல்” என்ற தலைப்பில் இந்த செய்தி வெளியாகியிருந்தது. பல்வேறு செய்தி ஊடகங்களிலும் இந்த செய்தி 2019ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.

Also Read: காஞ்சிபுரம் திமுக MLA காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

திமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Youtube Video from, Thanthi TV, Dated April 01, 2019

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular