Thursday, December 18, 2025

Fact Check

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படுவதாகப் பரவும் 2020ஆம் ஆண்டு வீடியோ!

banner_image

Claim: திமுக எம்பி ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை விசாரணை 
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். 

திமுக எம்பி ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை விசாரணை;மூடிமறைக்கும் தமிழ்நாடு ஊடகங்கள் என்று செய்தி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் அமலாக்க துறையினரால் அழைத்து விசாரிக்கப்பட்டு கொண்டு இருப்பதை வட நாட்டு ஆங்கில ஊடகம் காட்ட வழக்கம் போல் தமிழக ஊடகங்கள் நவ துவாரங்களில் மூடி கப்சிப்.இதுதான் இவர்கள் நியாயம் நடுநிலை.” என்று இந்த வீடியோ வைரலாகிறது.

Screenshot from Twitter @Umagarghi26
Screengrab from Facebook/kugan.cm.7
Screengrab from Facebook/Jai Murugan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கர்நாடகாவில் மதுவும், கோழியும் கொடுத்து ஓட்டு கேட்கும் பாஜக என்று பரவும் தெலுங்கானா வீடியோ!

Factcheck / Verification

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோ Times Now செய்தி ஊடகத்தினுடையது என்றாலும், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள செய்தியாளர் சபீர் அகமது தற்போது மற்றொரு ஊடகத்தில் ஆசிரியராக பணியில் இருப்பதால் குறிப்பிட்ட வீடியோ பழையதாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ந்தோம்.

அதன் முடிவில், வைரலாகும் வீடியோ கடந்த ஜூலை 01, 2020 அன்று Times Now சமூக வலைத்தளப்பக்கத்தில் “#Breaking | Enforcement Directorate questions DMK MP Jagathrakshakan in an alleged money laundering case.
Details by TIMES NOW’s Shabbir.”
என்று இடம்பெற்றிருந்தது நமக்குத் தெரிய வந்தது.

மேலும், அவர்களுடைய இணையதளப்பக்கத்திலும் கடந்த 2020ஆம் ஆண்டு, “Former Mantri & DMK MP appears before ED. DMK MP is facing money laundering charges and ED is investigating the case. The other government officials are also under the scanner. Shabir, a Times Now Correspondent says ” Questioning of DMK MP Jagathrakshakan is underway since morning at the Enforcement Directorate’s (ED) office in Chennai. The Enforcement Directorate officers have summoned the DMK MP to appear before the officers in the money laundering case, in which the MP has brought the property and the Enforcement Directorate officers have obtained some details and information that there was a huge amount of money laundering.” என்று இந்த செய்தி வீடியோ இடம்பெற்றிருந்தது.

எனவே, தற்போது வைரலாகும் வீடியோ செய்தி கடந்த 2020ஆம் ஆண்டைச் சேர்ந்தது, புதியது அல்ல என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

Also Read: சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக பரவும் எடிட் வீடியோ!

Conclusion

திமுக எம்பி ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறை விசாரணை;மூடிமறைக்கும் தமிழ்நாடு ஊடகங்கள் என்று பரவிய வீடியோ புதியதல்ல; கடந்த 2020ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Times Now, Dated July 01, 2020 News Article From, Times Now, Dated July 01, 2020


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,598

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage