Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் மரத்தில் கட்டப்பட்ட பெண்
வைரலாகும் வீடியோ காட்சி ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்வாகும்.
கந்துவட்டி கொடுமையால் மரத்தில் கட்டப்பட்ட பெண் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்… #திராவிடமாடல் #திமுககேடு_தரும் #ADMK_TNJ” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழகத்தில் மீண்டும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
கந்துவட்டி கொடுமையால் மரத்தில் கட்டப்பட்ட பெண் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் பதிவில் பெண்கள் இருவரும் தெலுங்கில் பேசிக்கொண்டிருப்பது நமக்குத் தெரிந்தது. எனவே, அதனை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அச்சம்பவம் ஆந்திர மாநிலம், சித்தூரில் நடைபெற்றது என்பது உறுதியாகியது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நாராயணபுரம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பன் என்பவர் முனிகண்ணப்பா என்பவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிய நிலையில், அதை அவர் திருப்பி செலுத்தவில்லை என்று அவரது மனைவி ஸ்ரீஷாவை மரத்தில் கட்டி வைத்த சம்பவம் வீடியோவாக பரவியது. இதுகுறித்த செய்தி புதியதலைமுறை, NDTV உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட வீடியோ செய்தியே தமிழகத்தில் நடைபெற்றதாகப் பரவி வருகிறது.
Also Read: அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
கந்துவட்டி கொடுமையால் மரத்தில் கட்டப்பட்ட பெண் என்று பரவும் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்ததல்ல; ஆந்திராவில் நடைபெற்ற சம்பவம் என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
News Report from, NDTV, Dated June 17, 2025
YouTube Video from Puthiya Thalaimurai, Dated June 17, 2025
YouTube Video from, SumanTV News, Dated June 17, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 23, 2024