Claim: அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ர ஜெபம்
Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ர ஜெபம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் “ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம்”, ஜெப்ஃரி அர்ஹார்ட் போன்ற அமெரிக்கர்களால், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, அட்சர சுத்தமாக உச்சரிக்கிறார்கள்! உதவாநிதி போன்ற மங்குனிகளே! உலகமே சனாதனத்தின் பக்கம் திரும்ப, நீங்க யாருங்கடா பிஸ்கோத்து அதை ஒழிக்க?” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ர ஜெபம் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது இந்நிகழ்வு கடந்த 2018 ஆம் ஆண்டு குரோஷியாவில் நடைபெற்றது என்பது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், இதுகுறித்து ஆராய்ந்தபோது Veda Union என்கிற ஆன்மிக அமைப்பு குரோஷியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதியன்று அனைத்து ஐரோப்பிய வேத மந்திர குழுக்களையும் இணைத்து ருத்ரம் 11 என்னும் இந்நிகழ்வை நடத்தியது நமக்குத் தெளிவாகியது.

இந்நிகழ்வின் புகைப்படங்களை இங்கே காணுங்கள்.

எனவே, வைரலாகும் வீடியோ அமெரிக்க வெள்ளை மாளிகையில் எடுக்கப்பட்டது அல்ல; குரோஷியாவில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகியது.
Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!
Conclusion
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ர ஜெபம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video From, Krishna Singh, Dated April 28, 2018
Image Gallery From, Veda Union
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)