Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

அமெரிக்காவின் பென்டகன் அருகே குண்டுவெடிப்பு என்று பரவும் போலியான AI புகைப்படம்!

banner_image

Claim: அமெரிக்காவில் பென்டகன் அருகே குண்டு வெடிப்பு
Fact: வைரலாகும் புகைப்படம் போலியானதாகும். பென்டகனுக்கு அருகில் அப்படி எந்த நிகழ்வும் ஏற்படவில்லை.

அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு அருகில்  குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“ அமெரிக்காவில் பென்டகன் அருகே குண்டு வெடிப்பு” என்பதாகவும், பென்டகன் அருகே பயங்கர வெடிவிபத்து என்பதாகவும் முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவியது.

அமெரிக்காவின்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய  அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள ராணுவத் தலைமையகம் பென்டகனுக்கு அருகில் பயங்கர வெடிவிபத்து என்று புகைமண்டலம் சூழ்ந்த புகைப்படம் உலகளாவிய அளவில் பரவியதைத் தொடர்ந்து  Bellingcat உடன் தொடர்புடைய டிஜிட்டல் இன்வெஸ்டிகேட்டரான Nick Water என்பவர் வைரலாகும் புகைப்படம் உண்மையானதல்ல; பென்டகனுக்கு அருகில் வெடிவிபத்து எதுவும் நிகழவில்லை என்பதை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கியிருந்தார். மேலும், வைரலாகிய புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

https://twitter.com/N_Waters89/status/1660651721075351556?s=20

தொடர்ந்து, Arlington Countyயில் பென்டகன் அமைந்துள்ள நிலையில், Arlington Fire & EMS தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ”@PFPAOfficial and the ACFD are aware of a social media report circulating online about an explosion near the Pentagon. There is NO explosion or incident taking place at or near the Pentagon reservation, and there is no immediate danger or hazards to the public.” என்று விளக்கமளித்திருந்தது.

இதுகுறித்து, Bloomberg தனது இணையதளத்தில் “How Fake AI Photo of a Pentagon Blast Went Viral and Briefly Spooked Stocks” என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ரஷ்ய ஊடக பிரிவான RT, Zerohedge, Bloomberg Feed உள்ளிட்ட சமூக  வலைத்தளப் பக்கங்களே இப்புகைப்படத்தை முதலில் பகிர்ந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Bloomberg பெயரில் இப்புகைப்படத்தை பரப்பிய கணக்குகள் அவர்களுடைய அதிகாரப்பூர்வ கணக்குகள் இல்லை என்றும் Bloomberg தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

Conclusion

அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகப் பரவும் புகைப்படம்  போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from, Nick Waters, Dated May 22, 2023

Tweet From, Arlington Fire & EMS, Dated May 22, 2023
News Report From, Bloomberg, Dated May 22, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.