விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை இணைத்து இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படம் ஒன்று இயக்கவிருக்கிறார் என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர் எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பவர்கள். எளிய மக்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் அரசியல் களத்தில் செயல்பட்டு வருகின்றவர்கள்.
இந்நிலையில், “பா.ரஞ்சித் இயக்க உள்ள் புதிய படம். திருமாவளவன் வாழ்க்கை வரலாற்றையும் தோழர் சுந்தரவள்ளி வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து படம் இயக்க உள்ளார் பா.ரஞ்சித். உதயநிதி தயாரிக்க உள்ள படத்தின் தலைப்பை மக்கள் முடிவு செய்ய படக்குழு வேண்டுகோள்” என்று தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
திருமாவளவன் மற்றும் தோழர் சுந்தரவள்ளி வாழ்க்கை வரலாற்றை இணைத்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படம் என்பதாக வைரலாகும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
இயக்குனர் பா.ரஞ்சித் குறிப்பிட்ட இந்த திரைப்படம் குறித்து அறிவிப்பு எதனையும் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளாரா என்று தேடிப்பார்த்தோம். ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. செய்திகளிலும் அப்படிப்பட்ட அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
தொடர்ந்து, குறிப்பிட்ட நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் வைரலாவதாலும், அதில் எழுத்துப் பிழைகள் இருந்ததாலும் தந்தி டிவி இணை ஆசிரியர் அசோகவர்ஷினியை தொடர்பு கொண்டோம். அப்போது அவர், குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது; எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தார்.
நவம்பர் 8 அன்று வெளியான மழை குறித்த தந்தி டிவியின் நியூஸ் கார்டினை எடிட் செய்து குறிப்பிட்ட வைரல் கார்டினை உருவாக்கியுள்ளானர் என்பதும் நமக்கு உறுதியானது.
Conclusion:
திருமாவளவன் மற்றும் தோழர் சுந்தரவள்ளி வாழ்க்கை வரலாற்றை இணைத்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படம் என்பதாக வைரலாகும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)