Fact Check
இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரவும் வீடியோ

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவுகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact
இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் ‘pml.n.official’ என்ற பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ மார்ச் 8, 2025 அன்றே பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அதாவது பஹல்காம் தாக்குதல் நடந்த தினத்திற்கு (ஏப்ரல் 22, 2025) ஒரு மாதத்திற்கு முன்பே பதிவிடப்பட்டிருந்தது.

வீடியோவில் காணப்படும் பாகிஸ்தான் வீரர் முதன்முதலாக விமானத்தில் செல்வதாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவ்வீடியோவில் அந்த வீரர் அழவில்லை; மாறாக சிரித்துக்கொண்டே இருந்தார். அவரை சுற்றி இருந்த ராணுவ வீரர்களும் அவரை பார்த்து சிரிப்பதை நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் “پاک فوج (பாகிஸ்தான் ராணுவம்)” என்ற பயனர் பெயரை கொண்ட ஃபேஸ்புக் பக்கத்திலும் மேற்கண்ட அதே தகவலுடன் வைரலாகும் இவ்வீடியோ 8 மாதங்களுக்கு முன்பு செப்டம்பர் 2, 2024 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இராணுவ வீரர் அழவில்லை என்பதும், இவ்வீடியோவுக்கும் தற்போது பஹல்காம் தாக்குதலுக்கு பின் நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனைக்கும் தொடர்பில்லை என்பதும் தெளிவாகின்றது.
Also Read: பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இந்து குடும்பத்தை இஸ்லாமியர்கள் தாக்கினரா?
இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரப்பப்படும் தகவலும் தவறானது என்பதும் உறுதியாகின்றது.
Sources
Facebook Post from user, پاک فوج, Dated September 2, 2024
Instagram Post from user, pml.n.official, Dated March 8, 2025