Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இந்து குடும்பத்தை இஸ்லாமியர்கள் தாக்கினர்.
இத்தகவல் தவறானதாகும். சாலையில் ஹாரன் அடித்ததற்காக ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த வன்முறை நடந்துள்ளது.
“பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இன்று புனேவின் பவானி பேத் குருநானக் நகரில் ஒரு இந்து குடும்பம் தாக்கப்பட்டது. ஒரு இந்து கூட உதவிக்கு வரவில்லை; எல்லாம் முடிந்த பிறகுதான் போலீஸ் மார்ஷல் கூட வந்தார். இதை அதிகம் பகிருங்கள், அனைத்து ஜிஹாதிகளும் கைது செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இந்து குடும்பத்தை இஸ்லாமியர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் ஊடகவியலாளர் சௌரப் கொராத்கர் என்பவர் வைரலாகும் இதே வீடியோவை ஏப்ரல் 29, 2025 அன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. ஹாரன் அடித்ததற்காக இந்த வன்முறை நடந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தேடுகையில் “Pune Road Rage: Man and His Family Attacked Over Honking Dispute in Bhawani Peth; VIDEO Surfaces” என்று தலைப்பிட்டு லோக்மத் டைம்ஸ் எனும் ஊடகத்தில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இச்சம்பவம் குறித்து இச்செய்தியில் குறிப்பிட்டிருந்ததாவது,
குறுகலான சாலை ஒன்றில் சோயப் உமர் சையது என்பவர் தனது ஆட்டோவை நிறுத்தி பொருட்களை இறக்கியுள்ளார். அப்போது அவ்வழியில் வந்த ஹர்ஷ் கேஷ்வாணி என்பவர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த சோயப் அவரை தவறாக பேசியதோடு, அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
சிலநேரம் கழித்து ஹர்ஷ் அவரது சகோதரர், சகோதரி மற்றும் தாத்தாவோடு மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். சோயப் மற்றும் வேறு சிலர் சேர்ந்து மீண்டும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஹர்ஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹர்ஷின் சகோதரர் கரண் மற்றும் சகோதரி நிகிதாவுக்கும் அடிபட்டுள்ளது. ஹர்ஷின் தாத்தாவை சோயப் தவறாக பேசியதோடு, வீட்டை கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து கரண் புனேவின் கடக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சோயப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதும் அவருக்கு உதவியவர்கள் மீதும் கொலைமுயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களும் இந்த வன்முறை குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவம் ஹாரன் அடித்ததற்காக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து கடக் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சீனியர் இன்ஸ்பெக்டர் சஷிகாந்த் சாவனிடம் வைரலாகும் வீடியோ குறித்து நியூஸ்செக்கர் சார்பில் விசாரித்தோம்.
அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக அக்குடும்பம் தாக்கப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், ஹாரன் அடித்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது என்றும் உறுதி செய்தார்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கை நமக்கு கிடைத்தது. அந்த அறிக்கையிலும் மேற்கண்ட தகவலே இடம்பெற்றிருந்தது. பாகிஸ்தான் குறித்து பதிவிட்டதால் ஏற்பட்ட வன்முறை என்று எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை
Also Read: எம்ஜிஆர் முகத்தோற்றத்தையுடைய வெளிநாட்டவர் என்று பரவும் வீடியோ உண்மையானதா?
பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இந்து குடும்பத்தை இஸ்லாமியர்கள் தாக்கியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். சாலையில் ஹாரன் அடித்ததற்காக ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த வன்முறை நடந்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post from Saurabh Koratkar, Journalist, Dated April 29, 2025
Report from Lokmat Times, Dated April 29, 2025
Phone Conversation With Senior Inspector Shashikant Chavan, Khadak Police Station
FIR Copy
(With inputs from Prasad S Prabhu, Newschecker Marathi Team)
Ramkumar Kaliamurthy
June 2, 2025
Ramkumar Kaliamurthy
May 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 20, 2025