Fact Check
ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே காணலாம்.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact
ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் வீடியோவில் ‘dn_osama’ என்கிற வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் வடக்கு காசா பகுதியை சார்ந்த ஒசாமா A ரபியா (OSAMA A RABEA) எனும் போட்டோ ஜர்னலஸ்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 23, 2025 அன்றே வைரலாகும் இவ்வீடியோ பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அதாவது பஹல்காம் தாக்குதல் நடந்த தினத்திற்கு (ஏப்ரல் 22, 2025) மூன்று மாதங்களுக்கு முன்பே பதிவிடப்பட்டிருந்தது. வடக்கு காசாவில் பாலஸ்தீன மக்கள் வசிக்கும் ஜபலியா அகதிகள் முகாம் என்று குறிப்பிட்டு இவ்வீடியோவானது பதிவிடப்பட்டிருந்தது.

Also Read: இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரவும் வீடியோ உண்மையானதா?
இதன்படி பார்க்கையில் ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் வீடியோத்தகவல் தவறானது என தெளிவாகின்றது.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் பகுதி பாகிஸ்தான் அல்ல; வடக்கு காசாவின் ஜபல்யா அகதிகள் முகாமாகும்.
Sources
Instagram Post from OSAMA A RABEA, Photo Journalist, North Gaza, Dated January 23, 2025