Fact Check
இந்திய ராணுவ வீரருக்கு பாகிஸ்தானியர்கள் உதவியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
இந்திய ராணுவ வீரருக்கு பாகிஸ்தானியர்கள் உதவினர்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே காணலாம்.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact
இந்திய ராணுவ வீரருக்கு பாகிஸ்தானியர்கள் உதவியதாக பரவும் வீடியோவில் பொதுமக்கள் கன்னடத்தில் பேசுவதை கேட்க முடிந்தது. இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் IAF Garud எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘Unknown Man Reassured and Holds Hand of Injured Pilot’ என்று தலைப்பிட்டு பிப்ரவரி 20, 2019 அன்று வைரலாகும் வீடியோ பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
முகம் தெரியாத நபர் ஒருவர் கடுமையாக அடிபட்டிருந்த IAF சூரிய கிரண் விமானத்தின் விமானியின் கையை பிடித்து, அவரை அமைதிப்படுத்தி, உதவி சீக்கிரம் வருவதாக தெரிவித்தார் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் டிவி9 கன்னடா, ஏசியாநெட் சுவர்ண நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களில் பிப்ரவரி 19, 2019 அன்று இதே வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.


தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இச்செய்திகளின் வாயிலாக நமக்கு தெரிய வருவது யாதெனில், பெங்களூரில் பயிற்சியில் இருந்த சூரிய கிரண் ஏரோபெடிக் அணியை சார்ந்த இரண்டு இராணுவ விமானங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஷாஹில் காந்தி எனும் வீரர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். விஜய் ஷெல்கே, தேஜஸ்வர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.
இதனையடுத்து தேடுகையில் வீடியோவில் காணப்படும் வீரர் விஜய் ஷெல்கே என்பதும், அவருக்கு உதவியவர் சேத்தன் குமார் எனும் ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் மாணவர் என்பதும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியின் மூலம் அறிய முடிந்தது. விபத்துக்கு பிறகு ஷெல்கேவும் சேத்தன்குமாரும் சந்தித்தாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரவும் வீடியோ உண்மையானதா?
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் இந்திய ராணுவ வீரருக்கு பாகிஸ்தானியர்கள் உதவியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என உறுதியாகின்றது.
Sources
Instagram Post from IAF Garud, Dated February 20, 2019
Report by TV9 Kannada, Dated February 19, 2019
Report by Asianet Suvarna News, Dated February 19, 2019
Report by The New Indian Express, Dated February 23, 2019