Claim: பாஜகவின் பல்லடம் மாநாட்டில் இருக்கைகள் காலியாக இருந்ததாக பரவும் படம்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் படம் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா நேற்றைய முன்தினம் (27/02/2024) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்த மாநாட்டிற்கு மக்கள் யாரும் வராமல் இருக்கைகள் காலியாக இருந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!
Fact Check/Verification
பாஜகவின் பல்லடம் மாநாட்டில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருக்கைகள் காலியாக இருந்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்டதை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் (01/07/2023) கரூரில் பாஜக சாசார்பில் நடத்தப்பட்ட மாற்றத்திற்கான மாநாட்டிற்கு மக்கள் கூட்டம் வரவில்லை என்று ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியில் இதே படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியானது ஜூலை 2, 2023 அன்று பிரசுரமாகியிருந்ததது.

தொடர்ந்து தேடுகையில் மேக்ஸ்டர், இ-தமிழ் நியூஸ் உள்ளிட்ட ஆன்லைன் ஊடகங்களிலும் ஜூலை 2, 2023 அன்று இதே செய்தி இதே படத்துடன் வெளிவந்திருப்பதை காண முடிந்தது.


இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் சென்ற வருடம் ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்ட பழைய படம் என்பதும், இப்படத்திற்கும் நேற்றைய முன்தினம் பல்லடத்தில் நடந்த மாநாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் உறுதியாகின்றது.
Also Read: பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசியதாக பரவும் பழைய வீடியோ!
Conclusion
பாஜகவின் பல்லடம் மாநாட்டில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருக்கைகள் காலியாக இருந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் படம் சென்ற வருடம் ஜூலை மாதத்தில் கரூரில் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from One India Tamil, Dated July 02, 2023
Report from Magzter, Dated July 02, 2023
Report from ETamilNews, Dated July 02, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)