Claim
நடுரோட்டில் குழந்தை இருப்பதைப் பார்த்து குழந்தையை பாதுகாத்து பத்திரமாக ஓரத்தில் கொண்டு சேர்க்கும் மயில்.

வைரலாகும் இந்த வீடியோவை இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.
Also Read: நாடார் சமுதாயத்தினர் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறினாரா?
Fact
மயில் ஒன்று குழந்தையை நடுரோட்டில் இருந்து காப்பாற்றுவதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் பல்வேறு இடங்களில் காட்சியில் பிழைகள் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது. குழந்தையின் கைகள், மயிலின் கொண்டை உள்ளிட்டவற்றில் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளை நம்மால் காண முடிந்தது. எனவே, குறிப்பிட்ட வீடியோ காட்சி AI மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கண்டறிந்தோம்.





எனவே, இந்த வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து நம்முடைய நியூஸ்செக்கர் அங்கம் வகிக்கும் The Deepfakes Analysis Unit (DAU), of The Misinformation Combat Alliance (MCA) மூலமாக WasitAI மூலமாக இந்த காட்சிகளை ஆராய்ச்சிக்கு உள்ளாக்கியபோது இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் AI மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெளிவாகியது.



Also Read: சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Sources
DAU Analysis