Fact Check
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேசையில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேசையில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை
Fact
வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் அங்கு இடம்பெற்றிருப்பது பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சிலையாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேசையில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜயில் பெரியார் கதருங்க டா சங்கீஸ்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேசையில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலமாக ஆராய்ந்தபோது ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஆலிவர் ரியக்ஸ் என்கிற கூடைப்பந்தாட்ட வீரர் அமெரிக்க அதிபரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ Daily Mail Sport என்கிற யூடியூப் பக்கத்தில் நமக்குக் கிடைத்தது.
அதில், மேசையின் மேல் அமெரிக்க அறிஞரும், அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவருமான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சிலையே இடம்பெற்றிருப்பது நமக்குக் காணக்கிடைத்தது.
மேலும், மார்கோ மார்டின் என்கிற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு உதவியாளர் வெளியிட்டிருந்த இந்த சந்திப்பு குறித்த வீடியோவிலும் அந்த சிலை தெளிவாக காணக்கிடைக்கிறது.
தொடர்ந்து, இந்த சிலை குறித்து ஆராய்ந்தபோது Harvard Art musuem பக்கத்தில் குறிப்பிட்ட பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சிலை குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப் மேசையில் இருக்கும் சிலையும், இந்த சிலையும் பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுடையதே என்பதையும் நம்மால் காண முடிந்தது. பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சிலையையே பெரியார் சிலை என்பதாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
Also Read: கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
Conclusion
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேசையில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை என்று பரவும் புகைப்படம் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post from, Margo Martin, Dated May 22, 2025
Harvardartmuseums.org