சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkஇந்தியா - சீனா தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரரின் புகைப்படமா இது ?

இந்தியா – சீனா தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரரின் புகைப்படமா இது ?

உரிமைகோரல் :

ஒட்டு மொத்த இந்தியா மீது விழ இருந்த அடிகளை உங்கள் உடம்பில் வாங்கிக் கொண்டு எங்களைப் பாதுகாத்த… இந்திய ராணுவ வீரர்களான உங்களை

அரசியல், மொழி, இனம், மதம் பாகுபாடு இல்லாத உங்கள் ஒவ்வொருவரையும் பாதம் தொட்டு வணங்குகிறோம்…

Jaihind

https://www.facebook.com/photo?fbid=1137664553293741&set=a.165111953882344

சரிபார்ப்பு :

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்ட இந்திய வீரர் என மேற்காணும் புகைப்படங்கள் இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மோதலால் இந்திய ராணுவ வீரருக்கு எப்படியெல்லாம் காயம் நேர்ந்துள்ளது எனப் இப்புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

 இந்த புகைப்படத்தை DR .ஆனந்தராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார் .சீன வீரரின் தாக்குதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து உள்ளனர். ஆனால், காயமடைந்தவர்களின் புகைப்படங்கள் வெளியாகாத நிலையில் பரவி வரும் இப்புகைப்படம் உண்மையா? இதன் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கரில் அரியத் தொடங்கினோம் .

உண்மைத் தன்மை :

2016-ம் ஆண்டு வெளியான வலைப்பதிவுகள் பலவற்றில் தாய்லாந்து நாட்டின் ராணுவத்தினர் உடைய கடுமையான பயிற்சி என இப்புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இப்புகைப்படத்தின் தொடக்கம் எங்கு என தெரியவில்லை, ஆனால் தாய்லாந்து மொழியில் உள்ள பல வலைப்பதிவுகளில் 4 ஆண்டுகளுக்கு முன்பே இடம்பெற்று இருக்கிறது.

https://th-sawudeekhao.blogspot.com/2016/01/100-53.html

அந்த பக்கத்தில் ஒரு ராணுவ வீரன் எவ்வாறு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளத்து .லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாகப் பல பழைய வீடியோக்கள், தவறான புகைப்படங்கள் இந்திய அளவில் பரப்பப்பட்டு வருகிறது. 

முடிவுரை :

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் முதுகில் காயங்களுடன் இருக்கும்  புகைப்படம் இந்திய ராணுவ வீரரின் புகைப்படம் அல்ல என்பது தெரியவந்து உள்ளது, 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டப் புகைப்படத்தை மீண்டும் பரப்பி வருகின்றனர் .

Sources

  • Google Search
  • Twitter 
  • Facebook
  • Blog

Result: False 

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular