ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் தவறான வீடியோ!

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்தார்

Fact: உண்மையில் கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ அணி தோல்வியுற்று, போட்டியிலிருந்து வெளியேறியதால் அந்த அணியின் ரசிகர் ஒருவர் மனமுடைந்து டிவியை உடைத்ததாகும்.

நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த சனிக்கிழமை அன்று (மே 14) மோதிக் கொண்டன. இப்போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியுற்றது.

இதனையடுத்து பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் டிவியை உடைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் பரவி வருகின்றது.

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் வீடியோத்தகவல்

X Link | Archive Link

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் வீடியோத்தகவல்

Archive Link

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் வீடியோத்தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!

Fact Check/Verification

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில்“Mexico fan wildly destroys TV with knife in emotional outburst after World Cup heartbreak”  என்று குறிப்பிட்டு டிசம்பர் 02, 2022 அன்று The Hindustan Mirror வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களில் இதே செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

அதேபோல் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபர் மெக்ஸிகன் கால்பந்து அணியின் ஜெர்ஸியை அணிந்திருப்பதையும் காண முடிந்தது.

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் வீடியோத்தகவல்

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படுவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர் அல்ல என்பது தெளிவாகின்றது.

Also Read: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகையை ஏந்தியிருந்தாரா ரசிகர் ஒருவர்?

Conclusion

பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைத்ததாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ சென்ற ஆண்டு கத்தாரில் நடந்த கால்பந்து போட்டியில் மெக்சிகோ அணி தோல்வியுற்று, போட்டியிலிருந்து வெளியேறியதால் அந்த அணியின் ரசிகர் ஒருவர் மனமுடைந்து டிவியை உடைத்தபோது எடுக்கப்பட்டதாகும்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from The Hindustan Mirror, Dated December 02, 2022
Self Analysis

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular