Claim: அலங்கார உடையில் பிரதமர் மோடி.
Fact: இந்த புகைப்படம் AI மூலமாக Sahid என்கிற கலைஞர் உருவாக்கியதாகும்.
பிரதமர் மோடி அலங்கார உடை அணிந்திருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இந்தியா ஜனநாயக நாடு என்று இன்னும் மோடிக்கு தெறியவில்லை. மக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் கூட இந்த அலங்கார உடை கழற்றபடலாம்:காரணம் இது ஜனநாயக நாடு என்று மோடி புரிந்து கொள்ள வேண்டும். நாடு முழுவதும் விவசாயிகள் வெய்யில் காற்று மழையால் மக்கள் துன்பபடும் போது மோடிக்கு மனசாட்சி இருக்கா” என்பதாக பலரும் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: பிரதமர் மோடியின் 1983ஆம் வருட MA டிகிரியில் 1981ல் இறந்த துணை வேந்தர் கையெழுத்திட்டாரா?
Factcheck / Verification
பிரதமர் மோடி அலங்கார உடை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.
சமூக வலைத்தளத்தில் Sahixd என்கிற பெயரில் இயங்கும் டிஜிட்டல் கலைஞர் ஷாகித், இந்த AI புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். ”மெட் காலாவில் உலகத் தலைவர்கள்” என்னும் தலைப்பின் கீழ் பிரதமர் மோடியின் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி, பிரதமர் மோடி மருத்துவராக, கிடார் இசைக்கலைஞராக என்று பல்வேறு விதங்களில் AI மூலமாக சித்தரித்துள்ளார் Sahid. அவர் மட்டுமின்றி உலகத் தலைவர்கள், மகாத்மா காந்தி என்று அவருடைய பட்டியல் நீள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் தவறான புகைப்படம்!
Conclusion
பிரதமர் மோடி அலங்கார உடை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக Sahid என்கிற டிஜிட்டல் கலைஞர் உருவாக்கியது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Instagram Post From, Sahixd, Dated April 03, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)