Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பிரதமர் மோடி பாடகி ரிஹானாவை பார்க்கும் படம்
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
“ஜி கேமராவை பார்க்காத அரிய புகைப்படம்” என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி பாடகி ரிஹானாவுக்கு அருகே அமர்ந்திருக்கும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ!
பிரதமர் மோடி பாடகி ரிஹானாவை பார்ப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக பிரதமரும் ரிஹானாவும் ஏதாவது விழாவில் பங்குப்பெற்றனரா என தேடினோம். இதில் நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து கூகுள் லென்ஸை பயன்படுத்தி பிரதமர் படம் குறித்து தேடுகையில் @Gujju_Er எனும் டிவிட்டர் கணக்கில் பிரதமரின் இதே புகைப்படம் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் பிரதமரின் பக்கத்து இருக்கை காலியாக இருந்தது.
இப்படத்தையும் வைரலாகும் படத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது.

இதனையடுத்து கூகுள் லென்ஸை பயன்படுத்தி ரிஹானாவின் படம் குறித்து தேடுகையில் மிர்ரர் செய்தி இணையத்தளத்தில் “Rihanna is chic in off-the-shoulder dress as she collects Harvard’s 2017 Humanitarian of the Year Award” என்று தலைப்பிட்டு வெளியிட்ட செய்தி ஒன்றில் வைரலாகும் படத்தில் காணப்படும் அதே தோற்றத்தில் ரிஹானா அமர்ந்திருக்கும் படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?
பிரதமர் மோடி பாடகி ரிஹானாவை பார்ப்பதாக கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Tweet By @Gujju_Er, Dated May 27, 2023
Report By Mirror, Dated March 1, 2017
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
October 9, 2025
Ramkumar Kaliamurthy
October 8, 2025
Ramkumar Kaliamurthy
October 8, 2025