Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள்
Fact: வைரலாகும் வீடியோ மியான்மரைச் சேர்ந்த பழைய காட்சியாகும்.
மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“இந்திய ஒன்றியத்தின் மிகப்பெரிய கொடுங்கோலன் ஆட்சியில் மணிப்பூரில் பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் நடுரோட்டில் வைத்து சுடும் காணொளி சிறுபான்மை இனத்தவர்களை கொல்வதை ஆதரித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்??” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், கடந்த டிசம்பர் 09, 2022ஆம் ஆண்டு Reeleak என்கிற இணையதளத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருப்பதைக் காண முடிந்தது. ”Cruel Punishment In Myanmar” என்கிற தலைப்புடன் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, நம் தேடலில் Myanmar Now கடந்த டிசம்பர் 06, 2022 அன்று வெளியிட்டிருந்த செய்திக்கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் குறிப்பிட்ட வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட், “ “Myanmar’s publicly mandated National Unity Government (NUG) has been carrying out a probe into the execution of a civilian by members of a resistance force under its command near Sagaing Region’s border with India. A video emerged on social media over the weekend in which around a dozen armed men and women are seen beating a woman before shooting her dead in the middle of a road.” என்கிற செய்தியுடன் இடம்பெற்றிருந்தது. இந்த கட்டுரையின்படி பாதிக்கப்பட்ட அப்பெண்மணியின் பெயர் Aye mar Tun என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், டிசம்பர் 08, 2022 அன்று DVB வெளியிட்டிருந்த செய்தியில், “ On Dec 4, a protest took place in Tamu town to condemn the murder of Aye Mar Tun. Protesters chanted slogans to denounce the PDF, NUG, and the Committee Representing Pyidaungsu Hluttaw (CRPH)” என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்மூலமாக, வைரல் வீடியோ மணிப்பூரில் எடுக்கப்பட்டது அல்ல; மியான்மரைச் சேர்ந்த பழைய வீடியோ என்பது உறுதியாகிறது.
மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பரவும் வீடியோ மியான்மரில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Reeleak Post, Dated December 9, 2022
Report By Myanmar Now, Dated December 6, 2022
Report By DVB, Dated December 8, 2022
(இந்த கட்டுரை முதலில் நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 20, 2025
Vijayalakshmi Balasubramaniyan
July 10, 2024
Ramkumar Kaliamurthy
April 29, 2024