பாமக நிறுவனர் ராமதாஸ், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றி பெற்றதன் மூலமாக பாமகவின் 32 ஆண்டு கால தொடர் போராட்டம் மற்றும் தியாகம் வெற்றி பெற்றது’ என்று கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact Check/ Verification:
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நேர்மறையான, எதிர்மறையான, நடுநிலையாக என்று குவிந்து வந்த கருத்துக்கள் ஏராளம்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக 100 நாட்கள் தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் தாக்குப் பிடித்த நடிகர் ஆரி, அறிவிக்கப்பட்டு அவருக்கு கோப்பை வழங்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபுறம் இருக்க, ‘நடிகர் ஆரி வெற்றி பெற்றது, 32 ஆண்டு கால பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டம் மற்றும் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நடிகர் ஆரி, பாமகவின் கொள்கையின் அடிப்படையிலான சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது போன்று சித்தரிக்கிறது இப்பதிவு.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
பாமக நிறுவனர் ராமதாஸ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றி பெற்றது குறித்து அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படத் தகவல் குறித்து அறிய அவரது சமூக வலைத்தளப் பக்கங்களை ஆராய்ந்து பார்த்தோம்.
அதில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற ஜனவரி 17 அன்று ராமதாஸ் அவர்கள் எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும், குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள கேலி செய்யும் வகையிலான வார்த்தைகளின் அடிப்படையில் அது நடிகர் ஆரியின் இனப்பிரிவு குறித்து உலவும் கருத்துக்களின் அடிப்படையில், சித்தரிக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்பது நமக்கு தெரியவந்தது.
Conclusion:
பாமக நிறுவனர் ராமதாஸ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி வெற்றி பெற்றது குறித்து அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படத் தகவல் முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்ட ஒன்று என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Satire
Our Sources:
Facebook: https://www.facebook.com/DrRamadoss/photos/a.445870728910552/1737484676415811/
Twitter: https://twitter.com/drramadoss?lang=en
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)