ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா?

Authors

Sabloo Thomas has worked as a special correspondent with the Deccan Chronicle from 2011 to December 2019. Post-Deccan Chronicle, he freelanced for various websites and worked in the capacity of a translator as well (English to Malayalam and Malayalam to English). He’s also worked with the New Indian Express as a reporter, senior reporter, and principal correspondent. He joined Express in 2001.

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (POK) சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்தனர்.

Fact: வைரலாகும் வீடியோவுக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் எவ்வித தொடர்புமில்லை. இவ்வீடியோவில் இருக்கும் சம்பவம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள உரி என்ற நகரத்தில் நடந்ததாகும்.

ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெலங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என்று பேசிய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்தியாவையும் இந்திய இராணுவத்தையும் ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல்

X Link | Archive Link

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல்

Archive Link

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் காஷ்மீரை அடிப்படையாக கொண்ட The people’s voice எனும் ஆன்லைன் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 20, 2023 அன்று வைரலாகும் வீடியோவை  பதிவிட்டு செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் ஜம்மு காஷ்மீரில் உள்ள உரிபகுதியில் குஜ்ஜார் மற்றும்  பகர்வால் சமுதாயத்தை சார்ந்தவர்கள் எஸ்.டி. பச்சோவ் அந்தோலன்’ எனும் நிகழ்வை நடத்தியதாகவும், அந்நிகழ்வில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவளித்து நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் உரிமையை காப்போம் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்ததகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல்
Post by The people’s voice

தொடர்ந்து தேடுகையில் The Gujjars of Uri J&K எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 19, 2023 அன்று இதே வீடியோ மேற்கூறிய அதே தகவலுடன் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல்
The Gujjars of Uri J&K’s post

J&k Gujjar Bakerwal Union எனும் ஃபேஸ்புக் பக்கத்திலும் ஆகஸ்ட் 20, 2023 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல்
  J&k Gujjar Bakerwal union’s Post 

இதனைத் தொடர்ந்து The people’s voice ஊடகத்தின் நிருபர் இக்பால் சோஹானை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம். அவர் இச்சம்பவம் உரியில் நடந்ததாகவும், அச்சமயத்தில் அவர் அந்த இடத்தில்தான் இருந்ததாகவும் தெரிவித்தார்.  

தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹாரி பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும், இதனை எதிர்த்து பாரம்பரியமாக பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குஜ்ஜார் மற்றும் பகர்வால் பிரிவினர் போராட்டம் செய்ததாகவும், அந்த போராட்டத்தின்போதே மேற்கண்ட உறுதிமொழியை அவர்கள் எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தேடுகையில் பஹாரி மற்றும் வேறு மூன்று சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜ்ஜார் மற்றும் பகர்வால் சமூகத்தை சார்ந்தவர்கள் போராடியது குறித்து ஆகஸ்ட் 10, 2023 அன்று ஃபிரண்ட்லைன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல்
Screenshot of the article appearing in Frontline

Also Read: ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுகிறாரா?

Conclusion

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு உட்பட்ட உரி பகுதியை சார்ந்தவர்களாவர்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post by The people’s voice on August 20, 2023
Facebook Post by The Gujjars of Uri J&K on August 19, 2023
Facebook Post by J&k Gujjar Bakerwal union on August 20, 2023
Report by Frontline on August 10, 2023
Telephone conversation with Journalist Iqbal Chohan

(இச்செய்தியானது நியூஸ்செக்கர் மலையாளத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular