திங்கட்கிழமை, ஜூன் 17, 2024
திங்கட்கிழமை, ஜூன் 17, 2024

HomeFact Checkகலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஐடன் மார்க்ரமை முத்தமிடும் SRH உரிமையாளர் காவ்யா மாறன்

Fact: வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருப்பவர் ஐடன் மார்க்ரமின் மனைவியான நிக்கோல் ஆவார்.

கலாநிதி மாறன் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளருமான காவ்யா மாறன், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தமிட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன். கர்மா என்பது யாதெனில் அன்னைக்கு நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் நடக்காத ஒன்றை சன் தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டினான் இன்று அவனது மகளின் கேவலமான வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. இதுக்கும் திமுக கொத்தடிமை நாய்கள் வெட்கமில்லாமல் முட்டு கொடுப்பானுக பாருங்க.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

கலாநிதி மாறன்
Screenshot from X @SURULIVEL1971

X Link/Archived Link

Screenshot from x @rmsenthilkumar1

X Link/Archived Link

Screenshot from x @msreeni60

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?

Fact Check/Verification

கலாநிதி மாறன் மகள், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளருமான காவ்யா மாறன், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். 

 வைரலாகும் வீடியோவை ஆராய்ந்து பார்த்தபோது, ஐடன் மார்க்ரமை முத்தமிடுபவர் அவரது மனைவி நிக்கோல் மார்க்ரம் என்பதை அறிய முடிந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ”Words will never be enough. I am so proud of you and this incredible team. The hard work, determination and passion that was displayed was truly special to witness. Thank you to all of those that supported us and this phenomenal team. To our friends and family,Thank you!” என்று நிக்கோல் மார்க்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

First Betway SA20ல் கோப்பை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்பின் வெற்றிக்கு தனது கணவரைப் பாராட்டி அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள முத்தமிடும் காட்சியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

மேலும், அவர் பதிவிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் நிக்கோல் அணிந்திருக்கும் ஆடை, கடிகாரம் உள்ளிட்டவையும், ஐடனின் கண்ணாடி உள்ளிட்டவைகளும் வைரல் வீடியோவுடன் ஒத்துப்போகின்றன. எனவே, வைரல் வீடியோவில் ஐடன் மார்க்கரமை முத்தமிடுபவர் அவரது மனைவி நிக்கோல் மார்க்ரம் என்பது நமக்குத் தெளிவாகிறது. குறிப்பிட்ட நிகழ்வின் வீடியோவே கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் என்று வைரலாகிறது.

Also Read: மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பர வீடியோவா இது?

Conclusion

கலாநிதி மாறன் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளருமான காவ்யா மாறன், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram Post By, Nicoledmarkram, Dated February 17, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular