Fact Check
புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய காவல்துறை அதிகாரி.. இச்சம்பவம் திமுக ஆட்சியில் நடந்தா?
Claim
திமுக ஆட்சியில் புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய காவல்துறை அதிகாரி.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையா?
Fact
திமுக ஆட்சியில் புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய காவல்துறை அதிகாரி தாக்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ஜூன் 20, 2019 அன்று வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் இச்சம்பவம் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய உதவி ஆய்வாளர் சண்முகம் மன்னிப்பு கேட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் உதவி ஆய்வாளர் சண்முகம் இச்சம்பவம் காரணமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியானது ஜூன் 20, 2019 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

Also Read: மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்களா?
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் நடக்கவில்லை, ஆறு வருடங்களுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் நடந்தது என்பது உறுதியாகின்றது.
அச்சமயத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது அஇஅதிமுகவாகும்; திமுக அல்ல. ஆகவே வைரலாகும் வீடியோவுக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகின்றது.மூக ஊடகங்களில் பரவி வருவதை நம்மால் காண முடிகின்றது.
Sources
Report from News 18 Tamil Nadu, dated June 20, 2019
Report from Times of India, dated June 20, 2019