Claim
குழந்தையுடன் வந்ததற்காக அபராதம் விதித்த போலீசார்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact
குழந்தையுடன் வந்ததற்காக அபராதம் விதித்த போலீசார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை InVID உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ஒன் இந்தியா தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 14, 2019 அன்று இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அப்பதிவில் இவ்வீடியோ குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் வந்தவரை சிதம்பரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
பைக்கில் வந்த குடும்பத்தினர் போலீசாரிடம் குழந்தைகளை காண்பித்து கெஞ்சியும் மனம் இரங்காத போலீசார்.
உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஸ்வைப் மெஷினை பயன்படுத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்ற விதி இருந்தும் அந்த விதியையும் மீறி போலீசார் நடத்திய இந்த வாக்குவாத வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து தேடுகையில் கடலூர் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ குறித்து தெளிவுப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த அறிக்கையில் இச்சம்பவம் 2019 ஆம் ஆண்டில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடையை சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோர் இச்சம்பவத்திற்கு பிறகு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு சேதமடைந்ததாக பரவும் படம் உண்மையானதா?
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் நடக்கவில்லை; 2019 ஆம் ஆண்டில் நடந்தது என்று உறுதியாகின்றது.
Sources
YouTube post by One India Tamil, Dated October 14, 2019
X post by Cuddalore District Police, Dated May 15, 2025