Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
ரயில் நிலைய போர்டு ஒன்றில் ‘Go Back Modi’ என்று எழுதப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மே 26) தமிழகம் வந்துள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் Go Back Modi என்கிற ஹேஷ் டேக் வைரலாகி வருகிறது.
அவ்வகையில், ரயில் நிலைய போர்டு ஒன்றில் “Tamil Nadu Says Go Back Modi. We Hate You” என்று எழுதப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
ரயில் நிலைய போர்டில் ‘Go back modi’ என்பதாக வைரலாகும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதனை ரிவர்ஸ் சர்ச் இமேஜ் முறைக்கு உள்ளாக்கினோம்.
அத்தேடலின் முடிவில், Business insider பக்கத்திலும், Auto evolution என்கிற இணையப்பக்கத்திலும் குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் நமக்குக் கிடைத்தது. அதில், “கன்னியாகுமரி” என்று தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளது.
பிரபல புகைப்படக் கலைஞர் மற்றும் இசைக்கலைஞரான Ed Hanley, அசாம் திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரையிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பயண அனுபவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பில் வைரலாகும் புகைப்படத்தின் மூலப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இப்புகைப்படத் தொகுப்பு பதிவிடப்பட்டுள்ளது.
Conclusion
ரயில் நிலைய போர்டில் ‘Go back modi’ என்பதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated Media/Altered Photo/Video
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.