Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim : ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்
Fact: வைரலாகும் பத்திரிக்கை செய்தி போலியாக உருவாக்கப்பட்டது
ராகுல்காந்தி கடந்த 2001 ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருந்த காரணத்தால் அமெரிக்காவின் பாஸ்டன் விமான நிலையத்தில் பிடிப்பட்டதாகவும், இந்திய அரசாங்கத்தின் தலையீடு காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறி பத்திரிக்கை செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இச்செய்தி AFP நிறுவனம் வாயிலாக பெறப்பட்டதாகவும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதாக பத்திரிக்கை செய்தி வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் பத்திரிக்கை செய்தியில் காணப்படும் பத்திரிக்கை நிறுவனத்தின் பெயர் ‘The Boston Globe’ நிறுவனத்தின் பெயருடன் ஒத்து போவதை நம்மால் காண முடிந்தது. ஆனால் அதேசமயம் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியின் அமைப்பு வித்தியாசமாக இருப்பதையும் காண முடிந்தது. இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து செப்டம்பர் 30, 2001 அன்று வெளிவந்த The Boston Globe இதழின் 13 ஆம் பக்கத்தை ஆராய்ந்தோம். இதில் வைரலாகும் செய்தி அன்றைய இதழில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.

தொடர்ந்து வைரலாகும் பத்திரிக்கை செய்தி குறித்து தேடுகையில், இத்தேடல் fodey.com எனும் இணையத்தளத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இந்த இணையத்தளத்தில் நாம் விருப்பப்பட்ட செய்தியை, விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட பத்திரிக்கையில் வெளிவந்ததுபோல உருவாக்க முடியும் என அறிய முடிந்தது.

அந்த இணையத்தளத்தில் வைரலாகும் பத்திரிக்கை செய்தியில் இருக்கும் அதே தகவல்களை உள்ளீடு செய்து சோதித்து பார்த்தோம். இதில் வைரலாகும் பத்திரிக்கை செய்தியில் காணப்படுவதுபோல் அதே பத்திரிக்கை செய்தியை எந்த வித்தியாசமும் இல்லாமல் இந்த இணையத்தளம் நமக்கு உருவாக்கி தந்தது.

இதனையடுத்து இச்செய்தி AFP நிறுவனம் வாயிலாக பெறப்பட்டதாக அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததால், இவ்வாறு ஒரு செய்தியை AFP வெளியிட்டதா என தேடினோம். இதில் அந்நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டதாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து வேறு நிறுவனங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டதா என தேடியதில், செப்டம்பர் 30, 2001 அன்று தி இந்துவில் செய்தி ஒன்று வெளிவந்திருந்ததை காண முடிந்தது.
செப்டம்பர் 11-ல் நடந்த தீவிரவாத தாகுதலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்கள் எதையும் விட்டு வைக்காத நிலையில் பாஸ்டன் விமான நிலையத்தில் FBI(Federal Bureau of Investigation) ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தியதாக செய்தி வந்துள்ளது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இச்செய்தியை யார்/எந்த நிறுவனம் தந்தது என்று அதில் கூறப்படவில்லை.
அதேசமயம் இத்தகவலை வெளியுறவுத் துறை அதிகாரிகள் பொய்யானது என்று மறுத்ததாகவும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு சோதனைகளுடன் FBI உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் தீவிர விசாரணைக்கு சிலர் உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் ஒருவேளை அதிமுக்கிய நபர்களை இவ்வாறான விஷயங்களுக்கு உட்படுத்த நேர்ந்தால் வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு தேவையான அனுமதி பெறுவார்கள் என்று அதிகாரிகள் கூறியதாக இதில் கூறப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்ப்டையில் காண்கையில் வைரலாகும் பத்திரிக்கை செய்தி பொய்யானது என்பது நமக்கு தெளிவாகின்றது.
Also Read: Fact Check: பிரதமர் மோடியின் 1983ஆம் வருட MA டிகிரியில் 1981ல் இறந்த துணை வேந்தர் கையெழுத்திட்டாரா?
ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதாக வைரலாகும் பத்திரிக்கை செய்தி போலியாக உருவாக்கப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Fodey.com, online newspaper clipping generator
The Hindu report, September 30, 2001
(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
November 14, 2025
Ramkumar Kaliamurthy
February 14, 2023
Ramkumar Kaliamurthy
August 27, 2025