சுனாமி எச்சரிக்கை காரணமாக இன்று (15/12/2021) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நேற்று (14/12/2021) புதுச்சேரி கடற்கரை சாலையில் சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு ஒன்று புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை துறை சார்பாக நடைப்பெற்றது.
இந்த ஒத்திகையை உண்மை என்று எண்ணி, புதுச்சேரியில் சுனாமி எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவியது.
இததகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து அது பொய்யான தகவல் என்று நிரூபித்திருந்தோம்.
அச்செய்தியை படிக்க: புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை; வைரலாகும் தகவல் உண்மையானதா?
தற்போது இத்தகவலைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
சுனாமி எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (15/12/2021) விடுமுறை அளிக்கப்பட்டதாக அறிகை ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் அறிக்கை போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை அறிய முடிந்தது.
புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் வைரலாகும் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“சுனாமி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என்று சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் செய்திக் குறிப்பு போலியானது.
நாளை 15/12/2021 (புதன்கிழமை) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்படுகிறது.”
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read: மாரிதாஸ் கைதினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தாரா அர்ஜூன் சம்பத்?
Conclusion
சுனாமி எச்சரிக்கை காரணமாக இன்று (15/12/2021) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் அறிக்கை போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puducherry Department of School Educations
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)